மீண்டுமொரு அஷ்ரப் யுகம் ஆரம்பம்..!

0
260

21919223_1700201943336458_754687247_nஷிபான் BMM

ஒரே காலநிலை, ஒரே அதிகாரம் என்றும் நிலைத்திருப்பதில்லை. காலச்சுழற்சி களம் காட்டும் என்ற வாசகங்களை மெய்யானது நேற்று. “காலம் கழியும் உண்மை ஒளிரும்” என்ற தொனிப்பொருளுடன் ஓங்கி ஒலித்தது பாலமுனைக்கூட்டம். கிழக்கு முஸ்லிம் அரசியல் போக்கினுடைய மாற்றங்கள் பாலமுனை மண்ணிலிருந்தே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதற்கு சிகரம் வைத்தாற்போல் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் தேசிய காங்கிரஸின் தேசியத்தலைமை இளைஞர்கள் புடைசூழ தோளில் சுமந்து வரப்பட்டமை மயிர்கூச்செறியச் செய்யும் நிகழ்வாகும். மகுடம் துறந்து அதிகாரம் இழந்து வீசிய கையும் வெறுங்கையுமாக இருக்கும் அதாவுல்லாவை தோளில் சுமக்க வேண்டியதற்கான தேவையென்னவென்பதனை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அவரின் பின்னால் பொதிந்துள்ள “அறம் சார்ந்த அரசியல் புலப்படும்”.

சீனாவிலே கம்மீயூனசத்துக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பேரறிஞன் லயோசு. அவனுடைய தத்துவங்கள் தகுத்தஜின்கள் என அறியப்படுகின்றன. அவன் ஒரு இடத்தில் குறிப்பிடும் போது, “எந்த ஒரு தோல்விக்குப்பின்னாலும் மிகப்பெரும் வெற்றி காத்திருக்கின்றது” என்கின்றான். அது அதாவுல்லாவின் அரசியல் வாழ்வில் பரிணமிப்பதனை நாமனைவரும் காணக்கிடைத்திருப்பது சிறப்பம்சமாகும்.

எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக் கால கட்டத்தில் இளைஞர்கள் புடைசூழ பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் சிங்கமென வந்தார்களோ, அதே போன்று இரண்டாம் அஷ்ரபான அதாவுல்லா வரலாறாகின்றார். இரண்டாம் அஷ்ரப் யுகம் மலர்கிறது. முஸ்லிம்களாகிய எமது அரசியல் அபிலாசைகளை மீட்டெடுத்துக் கொள்ள அஷ்ரப் பாசறையில் ஆரம்பம் முதல் புடம்போட்ட தொண்டன் அதாவுல்லாவின் கரங்களைப் பலப்படுத்த பல பாகங்களிலிருந்தும் தயாராவோம்.

முஸ்லிம்களைக் காட்டிக்கொடுத்தும், நல்லாட்சி அரசின் பின்னால் நக்கிப்பிழைத்து, வடகிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் உரிமைகளைக் குழி தோண்டிப்புதைத்த அலங்காரக்கதிரை ஜடங்களைப் புறக்கணிப்போம். புது யுகம் படைப்போம்..!21919223_1700201943336458_754687247_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here