கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் ஏறாவூரின் மூன்று வீதிகள் புனரமைப்பு

0
194

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் ஏறாவூரின் மூன்று வீதிகளை ப் புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதன் போது, ஏறாவூர் புன்னைக்குடா குறுக்கு வீதி, பழைய சந்தை மூன்றாம் குறுக்கு வீதி மற்றும் பழைய சந்தை ஆறாம் குறுக்கு வீதி ஆகியவற்றைப் புனரமைக்க அடிக்கல் நடப்பட்டன.
குறித்த மூன்று வீதிகளின் புனரமைப்புக்கென கிழக்கு முதலமைச்சரினால் 22 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.

இந்த வீதிகளின் புனரமைப்புக்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாாகண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாாகண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர் பாஷித் அலி ஆகியோரும் பங்கேற்றனர். 666 21761819_871211226391072_841437772395671000_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here