சிறப்பாக நடந்து முடிந்த ராபிதாவின் இஸ்லாமிய எழுச்சி மாநாடு.

0
188

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

DSC_0380ராபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு இம்முறை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி – மாஞ்சோலை ஹிழுரியா ஜும்ஆ மஸ்ஜிதில் நேற்று 22 ம் திகதி வெள்ளிக்கிழமை அஷர் தொழுகை முதல் இரவு 10 மணி வரை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் தமிழ் பேசும் உலகில் பிரபல்யமான இஸ்லாமிய அழைப்பாளர்களான கலாநிதி எம்.எல். முபாரக் மதனி, உண்மை உதயம் இஸ்லாமிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி, Dr ரைசுதீன் ஷரஈ, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, தஸ்தீக் மதனி ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். இவ் இஸ்லாமிய மாநாட்டில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.(F)DSC_0345 DSC_0362 DSC_0371 DSC_0377 DSC_0380 DSC_0397 DSC_0406 DSC_0409 DSC_0425 DSC_0438

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here