இலஞ்சக்குற்றச்சாட்டு விசாரணையைத் துரித்தப்படுத்துமாறு நிபந்தனைகளுடன் ஷிப்லி பாறுக் கடிதம்

0
250

SAM_1017எம்.ரீ.ஹைதர் அலி

காத்தான்குடி சம்மேளனத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இலஞ்சக்குற்றச்சாட்டினை விசாரிக்கக்கோரல் எனும் தலைப்பிட்டு 17.09.2017ஆந்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கையொப்பமிட்டு 23.09.2017ஆந்திகதி  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தலைவர்/செயலாளர்
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.
23.09.2017

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

இலஞ்சக்குற்றச்சாட்டினை விசாரிக்கக்கோரல் தொடர்பாக…..

மேற்படி விடயம் சம்பந்தமாக 17.09.2017 திகதி இடப்பட்ட தங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றது.

கடந்த 18.08.2017ம் திகதி கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லா அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நான் இலஞ்சம் பெற்றதாக மிகப்பெரும் பொய்யான அபாண்டத்தினை என் மீது சுமத்தியிருந்தார். அதன் பிரகாரம் முதன் முதலாக நான் தங்களுக்கு இக்குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு கடந்த 24.08.2017ம் திகதி கோரிக்கைக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தேன்.

எனவே, கௌரவ இராஜாங்க அமைச்சர் என் மீது சுமத்தியுள்ள பொய்யான குற்றச்சாட்டினை தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அத்துடன், கௌரவ இராஜாங்க அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள முரண்பாடான மேலதிகக் குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான ஆதாரங்களுடன் அதனை நிரூபிக்கத் தயாராகவுள்ளேன்.

இருப்பினும், நான் உங்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.  இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருப்பதனால் கீழ் வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

1. இரு தரப்பிலிருந்தும் தலா மூன்று நபர்கள் மட்டுமே விசாரணையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
2. விசாரணை ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை முழுமையான ஒலி, ஒளிப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
3. இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டுக்கொண்டிருப்பதனால் இந்த விசாரணை முகநூலினூடாக நேரடி ஒளிபரப்புச் செய்ய அனுமதிக்க வேண்டும்.
4. இவ்விசாரணையின் முடிவுகளை எழுத்து மூலம் எனக்கும், உங்கள் நிறுவனத்தின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தப்படல் வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரதிகள் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மற்றும் காத்தான்குடி பிராதன ஜூம்ஆப் பள்ளிவாயல்கள், முக்கிய நிறுவனங்கள் என்பனவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.Federation Shibly MPC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here