43வது தேசிய விளையாட்டுப் பெருவிழா: இரண்டாம் நாள் நிகழ்வு

0
208

IMG_9486(அகமட் எஸ். முகைடீன்)
43வது தேசிய விளையாட்டுப் பெருவிழா மாத்தறை கொட்டவில விளையாட்டு மைதானத்தில் கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. மூன்று தினங்களுக்கு நடைபெறும் இவ்விளையாட்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் ஒன்றான ஆண்களுக்கான உடற்கட்டழகர் போட்டி நேற்று 23ம் சனிக்கிழமை மாலை மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டி நிகழ்வுக்கு அதிதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட மாகாண அமைச்சர்கள், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை திணைக்கள உயரதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, 55 கிலோ தொடக்கம் 90 கிலோவுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான உடற்கட்டழகர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.IMG_9406 IMG_9407 IMG_9409 IMG_9410 IMG_9412 IMG_9421 IMG_9425 IMG_9435 IMG_9438 IMG_9459 IMG_9464 IMG_9465 IMG_9466 IMG_9470 IMG_9471 IMG_9481 IMG_9486 IMG_9488

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here