சுபையிரின் முகத்திரை கிழிக்கப்பட்டு, கபட நாடகங்கள் வௌிக்கொணரப்படும்-பாஷித் அலி ஆவேசம்

0
45

5555ஏறாவூரில் மறைந்த தலைவர் அஷ்ரபின் நினைவுப்பேருரை நிகழ்வொன்றினை நடத்தி அதில் பங்குபற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களுக்கு மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் மரணித்த தினம் கூட தெரியாமலிருந்தமை சமூகத்துக்கே பாரிய வெட்கக்கேடாகும் என ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் பாஷித் அலி தெரிவித்தார்.

அஷ்ரப் மரணித்த தினம் கூடத்தெரியாத சுபைர் மற்றும் மஹிந்த புகழ்பாடிய விமலவீர திசாநாயக்க ஆகியோரைக் கொண்டு அஷ்ரப் நினைவுப்பேருரைக்கூட்டம் வைத்து மறைந்த தலைவரின் பெயருக்கே களங்கம் கற்பிக்கும் நடவடிக்கையினை அதாவுல்லா உள்ளிட்டோர் முன்னெடுத்திருந்ததாக பாஷித் அலி குற்றஞ்சுமத்தினார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் ஏறாவூர் வாவிக்கரையை மெருகூட்டும் விதத்தில் படகுச்சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து  வௌியிட்ட முன்னாள் நகர சபை உறுப்பினர் பாஷித் அலி,

ஏறாவூரில்  இடம்பெற்ற கூட்டத்தின் போது கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சுபைர்  தாம் மறைந்த தலைவர் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தாகக் கூறினார். அவர் எங்கு எப்போது  மறைந்த தலைவர் அஷ்ரபுடன் இணைந்து அரசியல் செய்தார் என்பதைக்கூற முடியுமா? கிழக்கு பல்கலைக்கழகத்தின் காவலாளியாகக் கடமையாற்றியதையே அனைவரும் அறிவார்கள்.

அது மட்டுமல்லாது, கடந்த  17 ஆம் முதலமைச்சர் எங்கிருந்தார். அவர் வீதிகளுக்கு அடிக்கல் நாட்டுத்திரிகின்றார் என சுபைர் கூறினார். மறைந்த தலைவர் அஷ்ரபை நினைவு கூற ஏதாவது செய்தாரா? எனக்கேட்டார்.

சுபைர் அவர்களே, பெருந்தலைவர் அஷ்ரப் மரணித்தது 16 ஆம் திகதி 17 ஆம் திகதியல்ல. அதுவும் அதே தினத்தில் பெருந்தலைவர் அஷ்ரபை நினைவு கூற இடம்பெற்ற தோப்பாகிய தனி மரம் கூட்டத்தில் கிழக்கு முதலமைச்சர் தான் குர்ஆனும் ஒதினார்.

ஆகவே, பெருந்தலைவரின் மரண தினம் கூடத்தெரியாமல் அவரின் நினைவுப்பேருரை எனப்பெயரிட்டு முதலமைச்சர் மீது அவதூறு கூறுவதிலிருந்து உங்கள் தரம் தெரிகின்றது. கேவலமான அரசியல் பிழைப்புக்காக மறைந்த உன்னதமான தலைவரின்  பெயரைக்கூறி கேவலப்படுத்தாதீர்கள்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு சேவையும் செய்யவில்லை. அவ்வாறாயின், அவரது சேவைகளைக்கூறுமாறு  சவால் விட்டார்.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை மையப்படுத்த ஆடைத்தொழிற்சாலை அமைத்து யுவதிகளுக்கு வேலைவாய்யப்பு வழங்க நடவடிக்கையெடுத்துள்ளார். கல்வியியற்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் செய்து, நிர்க்கதியாய் நின்ற போது, நீங்களெல்லாம் அறிக்கை விட்டுத்திரிந்தீர். அப்போது அவர் அவர்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுத்தார்.

பல இடங்களில் அவருடைய நிதியில் பல்வேறு  பாடசாலைகக்கட்டடங்கள், வீதிப்புனரமைப்புக்கள் எனப்பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏன் நீங்கள் கூறினீர்கள் ஏறாவூருக்கு எந்தச்சேவையும் முதலமைச்சர் செய்யவில்லையென்று. சேறும் சகதியுமாக இருந்த எமது பொதுச்சந்தையை பல மாடிக்கட்டடங்களாக நிர்மாணிக்க நடவடிக்கையெடுத்தவர் யார்?

நெல்சிப் நிதியில் கட்டடப்பட்டு பாதியில் நின்ற கட்டடத்தை முழுமைப்படுத்த உள்ளூராட்சி மன்ற அமைச்சு மற்றும் மாகாண சபை நிதியைக் கொண்டு பூரணப்படுத்தியவர் யார்? அதற்கு அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாசார மண்டபம் மற்றும் வாசிகசாலையை முன்னெடுப்பவர் யார்? ஏறாவூர் வைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சைப்பிரிவு மற்றும் வௌிநோயாளர் பிரிவும் மற்றும் பல மில்லியன் பெறுமதியான உபகரணங்களை வழங்கியவர் யார்?

குப்பை கொட்டும் இடமாகக் காணப்பட்ட இடத்தை நூறு மில்லியன் ரூபா செலவில் சுற்றுலாத்தளத்தை அமைத்தவர் யார்? இன்று குன்றும் குழியுமாகக் காணப்பட்ட பல வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன. இதனையெல்லாம் யார் செய்தது?

ஜனாதிபதியால் மட்டக்களப்பு மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றீர்கள். சொந்த ஊரின் அபிவிருத்திக்கு நிதி கொண்டு வரத்தெரியாத நீங்கள் மற்றவர்களுக்கு விரல் நீட்டுகின்றீர்கள். முடிந்தால் நீங்கள் ஊருக்கு பெயர் சொல்லும்படி செய்த ஐந்து சேவைகளைப் பட்டியலிடுமாறு கோருகின்றேன்.

ஆகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு என அவர் முன் பொய் நாடகம் போட்டு விசுவாசம் காட்டும் நீங்கள், அதாவுல்லாஹ் நடத்திய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் மேடையேறி இருக்கின்றீர்கள். நீங்கள் மேடையில் கூறியது போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவ்வளவு ஆதரவென்றால், அதே மேடையில் ஜனாதிபதிக்கு ஏசிய விமலவீர திசாநாயக்கவுக்கு ஏன் ஒன்று கூற முடியாமல் போனது.

ஆகவே, உங்கள் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு கபட  நாடகங்கள் வௌிக்கொணரப்படும் என்பதை நாம் கூறி வைக்க விரும்புகின்றோம் என ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் பாஷித் அலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here