பணிப்பெண்களாக வௌிநாடு செல்வதை இல்லாதொழிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்-காவத்தமுனையில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
215

ooooவறிய பெண்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஓட்டமாவடி காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது, வசதி குறைந்த மற்றும் விதவைப்பெண்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்பும் நோக்கில் அவர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், பெண்கள் பணிப்பெண்களாக வௌிநாடு செல்லக்கூடாதென்ற கொள்கைக்கமைய இவ்வாறான சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்புக்களை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.iii lllll oooo ppppp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here