ஊடகமயப்படுத்தப்பட்ட ஜப்பார் திடல் பள்ளிவாயலின் அவல நிலைக்கு அன்வர் ஸலபியினால் தீர்வு-நன்றியுடன் சாட்டோ மன்சூர் (வீடியோ)

0
198

IMG_20170924_154624ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிருவாகப் பிரிவுகளுக்குட்பட்ட வாகனேரி கிராம சேவையாளர் பிரிவில் அடங்கும் முஸ்லிம்களினுடைய பாரம்பரிய விவசாய நிலப்பகுதியினை அண்டிக்காணப்படுகின்ற முஸ்லிம் குடியிருப்புக்களில் ஒன்றான ஜப்பார் திடல் பள்ளிவாயலின் அவல நிலைமையினை பற்றி மிகவும் மனவேதனையுடன் கடந்த வருடம் நவம்பர் 20ம் திகதி ஊடக அறிக்கையொன்றினை சமூக ஆர்வலர் சாட்டோ மன்சூர் சமூகமயப்படுத்தியிருந்தார்.

அந்த வகையில், குறித்த பள்ளிவாயலின் அவல நிலைமையினை கல்குடா உலமா சபை மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள், முஸ்லிம் விவசாய அமைப்புக்கள், கால் நடை வளர்ப்பாளர்களின் சங்கம், கல்குடா முஸ்லிம் சமூகம் என்பன கவனத்திலெடுத்து, குறித்த பள்ளிவாயலினை நாளாந்த தொழுகைகளை நடாத்தி அப்பிரதேசத்தில் விவசாய கால் நடை வளர்ப்பாளர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாயலுக்கான நிருவாகக் கட்டமைப்பினை ஏற்படுத்தும் வகையில், பள்ளிவாயலினை புனரமைப்புச்செய்வது காலத்தின் கட்டாயம் என்பதனையும் குறித்த ஊடக அறிகையுடனான காணொளி சமூகத்திற்கு தெளிவுபடுத்தி இருந்தது.

அதனடிப்படையில், மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அன்வர் ஸலபியினால் குறித்த பள்ளிவாயலுக்கான நிதி கொண்டு வரப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் பூரண பள்ளிவாயலாகவும் நிருமாணிக்கப்பட்டு, நாளாந்த தொழுகைகளை நடாத்தி அப்பிரதேசத்தில் விவசாய கால் நடை வளர்ப்பாளர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாயலுக்கான நிருவாகக் கட்டமைப்பினையும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மர்ஹும் மொஹம்மட் அவர்களின் புதல்வன் பசீரின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தனது நன்றிகளையும் முன்னின்று செயற்பட்ட அன்வர் ஸலபி, மற்றும் சகோதர் பசீர் ஆகியோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்த சமூக ஆர்வலர் வை.எல்.சாட்டோ மன்சூர், மேலும் அவ்விடத்திற்கு சென்று ஊடகங்களுக்கு தெரிவித்த காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ : – www.youtube.com/watch?v=_SMzilGmYqg&feature=youtu.beIMG_20170924_154624

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here