மன்னார் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை புனர்நிர்மானம் தொடர்பில் கலந்துரையாடல்

0
225

21766861_488676794840123_532688486055471787_nARA.றஹீம்
வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமான்ய றிப்கான் பதியுதீன் அவர்களின் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்றது.

மன்னார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளைக்காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியை மேம்படுத்தவும் அதனூடாக அனைத்துக் கிராமங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது.

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அங்கத்தவர்களான தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளரும் அமைச்சரின் இணைப்பாளருமான முனவ்வர், மீள்குடியேற்ற துரித செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப், அமைச்சரின் இணைப்பாளர்கள் அலிகான் ஷரீப், முஜாஹிர், மந்தை தமிழ் பிரதேச இணைப்பாளர் நந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.  21766812_488676864840116_2661373709156935138_n 21766861_488676794840123_532688486055471787_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here