காத்தான்குடியில் உலக அஞ்சல் தினம் அனுஸ்டிப்பு-படங்கள்

0
888

1-IMG_7275(பழுலுல்லாஹ் பர்ஹான்)
அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தினால் பிரகடனஞ்செய்யப்பட்டு ஓக்டோபர் மாதம் 9ம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் 2017 செப்டெம்பர் 25 தொடக்கம் 30 வரை அஞ்சல் ஊக்குவிப்பு வாரமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக காத்தான்குடி தபால் நிலையம் ஏற்பாடு செய்த உலக அஞ்சல் தின நிகழ்வு இன்று 25ம் திகதி திங்கட்கிழமை காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உலக அஞ்சல் தின நிகழ்வில், அஞ்சல் சேவகர் கே.கேதீஸ்வரன் உட்பட காத்தான்குடி தபால் நிலையத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அஞ்சற்காரர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, காத்தான்குடி தபால் நிலையத்திற்கு வருகை தந்த பாடசாலை மாணவர்களுக்கு விரைவு பணப்பரிமாற்றம், ஒண்லைன் கொடுப்பனவு சேவை, உள்நாட்டு, வெளிநாட்டு விரைவு தபால் சேவை, வெஸ்டன் யூனியன் பணப்பரிமாற்றம், தேசிய சேமிப்பு வங்கி கொடுக்கல் வாங்கல்கள், நிறை கூடிய பொதிகள் பரிமாற்ற சேவை, பெறுமானம் கட்டிப்பெறும் பொதிகள் சேவை உள்ளிட்ட தபால் நிலையத்தின் சேவைகள் தொடர்பில் அஞ்சல் சேவகர் கே.கேதீஸ்வரனினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், காத்தான்குடி தபால் நிலையத்தின் பல்வேறு பிரிவுகளும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இங்கு நூற்றாண்டுகள் கடந்தும் தொடருகின்ற இலங்கை அஞ்சல் சேவையின் அனைத்து சேவைகள் அடங்கிய துண்டுப்பிரசுரமொன்றும் விநியோகிக்கப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் காத்தான்குடி தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொது மக்களுக்கு மிக விரைவான முறையில் தபால் நிலையத்தின் சேவைகள் வழங்கப்பட்டதுடன், சிற்றுண்டி மற்றும் குடிபானங்களும் வழங்கப்பட்டது.

குறித்த உலக அஞ்சல் தினம் ஒக்டோபர் 9, 1874 இல் சுவிற்சலாந்தின் பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.1-IMG_7275 2-IMG_7167 3-IMG_7181 4-IMG_7205 5-IMG_7173 6-IMG_7195 7-IMG_7198 8-IMG_7185 9-IMG_7220 10-IMG_7191 IMG_7182 IMG_7223 IMG_7226

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here