சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினர் வடமாகாண சபை உறுப்பினருடன் சந்திப்பு (படங்கள்)

IMG_3251தற்போது ஐ.நா. சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள சுவிஸ் வந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபனுடன் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றுக்கு “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” முக்கியஸ்தர்களுடன் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி கலந்துரையாடல் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ் ரஞ்சன்) தலைமையில், பொருளாளர் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) முன்னிலையில் ஒரு நிமிட அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகியது.

முதலில் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களை, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முக்கியஸ்தர்களான திரு.இ.இரவீந்திரன் (ஒன்றிய முன்னாள் தலைவர்), திரு.சி.இலடசுமணன் (ஒன்றிய கல்விப்பொறுப்பாளர்) ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்க, தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களுடனான கலந்துரையாடல் மிகவும் சிறப்பாகவும், பல தெளிவுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

ஆரம்பத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையேயுள்ள விடயம், வடமாகாண சபை, அரசியல் தீர்வு, குடிநீர் பிரச்சினைக்குரிய தீர்வு, கல்விப் (பாடசாலை)  பிரச்சினை போன்ற பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு, தெளிவான பதில்கள் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களினால் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிர்வாக சபை உறுப்பினர்களுடன், ஒன்றிய முக்கியஸ்தர்களான இரவீந்திரன், நிமலன், பாபு, கோபால், தயாபரன், குமார் போன்றவர்களினால் “புங்குடுதீவின் நிலைமை, அபிவிருத்தி, வடமாகாண சபையினால் செய்யக்கூடிய உதவிகள்” போன்றவற்றைக் குறித்து வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களுடன் கலந்துரையாடப் பட்டது.

மேற்படி கலந்துரையாடலில்,

தொழில்களை மேம்படுத்தும் வகையில், தொழிற்சாலையொன்றை நிறுவுவது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமெனும் கோரிக்கையும்,
புங்குடுதீவு மேற்கு சித்தி விநாயகர் வித்தியாலயத்துக்கு ஆய்வுகூடம் அவசியமா? அவசியமெனில், அதனை அமைத்துக் கொடுக்க வேண்டுமெனும் கோரிக்கையும்,
வேலணை புங்குடுதீவுப் பாலத்தின் வீதியை அகலப்படுத்தி திருத்துவது எனும் முடிவின் நிலைமையென்ன? அதனை அகலப்படுத்த உடன் நடவடிக்கை எனும் கோரிக்கையும்,
நன்னீர் கடலுக்குப்போகாமல், புங்குடுதீவு வடகரைப் பகுதியில் அதாவது பழைய துறைப்பகுதியிலிருந்து கழுதைப்பிட்டி வரைக்குமுள்ள பகுதியை உள்ளடக்கி வடகரைப் பகுதியில் அணை கட்டுவது குறித்தும் ஆலோசிக்குமாறும், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கையும்,
மிக முக்கியமாக “கடல்நீரை நன்னீராக்கும் திடடம் குறித்தும்”, குறிப்பாக நெடுந்தீவில் முன்னெடுத்துள்ள மேற்படித் திட்டவரைவு குறித்து ஆராய்ந்து, அறிக்கை தருமாறும் கேட்கப்பட்டதுடன், இத்திடடத்தை முன்னெடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கையெடுக்க உதவ வேண்டுமெனும் கோரிக்கையும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தினரால்” முன்வைக்கப்படடது.

இதே போல், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பூநகரியைச்சேர்ந்த திரு.முருகவேள் மாஸ்டரினால் “பூநகரி-முட்கொம்பன் அ.த.க.பாடசாலையில் நிலவி வரும் அதிபர் நியமனம், ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றை நிவர்த்தி செய்யும் படியும், பூநகரி ஒல்லாந்தர் கோட்டைக்கு (10.கிலோ மீற்றர் சுற்றாடலிலுள்ள) யாழ் நகர் பக்கமாகவுள்ள கிராமங்களுக்கான குடிநீர் வசதிகளைக் கவனிக்குமாறும் அதற்காக கிராமங்களின் குளங்களில் மழைநீர் தங்கக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டது.

உதாரணமாக, குஞ்சபிட்டிக்குளம் போன்ற குளங்களை தூர்வார்வதன் மூலம் போருக்கு முன்னர் போன்று குளங்களில் மழை நீர் தேங்கினால் கால்நடைகள் பயனடைவதுடன், நிலநீர் சேமிக்கப்பட்டு கிணற்று நீர்கள் நல்ல நீராக மாறின், மக்கள் மீளக்குடியேறுவார்கள். பயிற்செய்கை, தென்னை வளர்ப்பு போன்றவற்றில் மக்கள் ஆர்வங்கொள்வர். எனவே, அந்தந்த ஊர் மக்கள் இளைஞர்களுக்கு இதற்கான ஊக்குவிப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான புதிய திட்டங்களை மேற்கொள்ளுமாறும், “பூநகரி வரலாற்று நூல்களில் இடம்பெறும் இடமாக இருந்தும் 6ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வரலாற்றுப்பகுதியில் இடம்பெற்றாலும், பூநகரிப் பாடசாலைகளில் கிளி.பூநகரி என அடுத்து ஊர்ப்பெயருடன் தான் பாடசாலைகளின் பெயர்கள் இடம்பெற வேண்டும்.

போரின்பின் அப்படியில்லாது கிளி முழங்காவில் அ.த.க.பாடசாலை என்றும் கிளி யெயபுரம் மகா வித்தியாலயம் என்றும் தவறாக இருந்து வருகின்றமை (இப்படிப் பல  பாடசாலைகளில்), எனவே கிளிநொச்சி கல்வித்திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து, பூநகரி கல்வி வலயத்திற்குள் வரும் எல்லாப் பாடசாலைகளும் “கிளி. பூநகரி” என்ற பெயரின் பின்னர் அந்தப் பாடசாலைகள் அமைந்திருக்கும் கிராமப்பெயர்கள் இடப்பெற்ற பெயர்களுடன் தான் பெயர்ப்பலகைகளிலும் அரச சேவைகளிலும் (நிர்வாக சேவைகளிலும்) இடம்பெற வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றேன்” எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இவற்றுக்குப் பதிலளித்த வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்கள் “இவற்றில் தான் கூடிய கவனஞ்செலுத்துவதாகவும், தன்னால் நிறைவேற்றித் தரக்கூடிய விடயங்களை உடன் முயற்சி செய்து நிறைவேற்றித் தருவதாகவும், சகல விடயங்களையும் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தலைவர் ரஞ்சனிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும்” தெரிவித்தார்.

இறுதியாக நன்றியுரையாற்றிய சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், “குறுகிய கால அழைப்பையும் பொருட்படுத்தாமல், கூட்டத்தில் உணர்வுடன் கலந்து கொண்ட ஒன்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றியெனவும், வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களிடம் நீங்கள் முன்வைத்த ஆலோசனைகள், கோரிக்கைகளை எவராயினும் எழுத்து மூலம் முன்வைக்கப்படும் பட்சத்திலேயே நாம் அதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும்” தெரிவித்தார்.

இவ்வண்ணம்…
திரு.செல்லத்துரை சதானந்தன்
செயலாளர்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்-005 006 007 008 009 010 010a 011 011a 012 020 021 IMG_3233 IMG_3234 IMG_3238 IMG_3241 IMG_3251 IMG_3252

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*