துரிதமாக இடம்பெற்று வரும் நீர்த்தாங்கி நிர்மாணப்பணிகளை அமைப்பாளர் றியாழ் நேரில் பார்வை

0
312

WhatsApp Image 2017-09-25 at 1.05.09 PMஊடகப்பிரிவு

ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான், சித்தாண்டி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் மிகத்துரிதமாக இடம்பெற்று வரும் கல்குடாவுக்கான சுத்தமான குடிநீர் வழங்கும் திட்ட வேலைகளைகளையும் கிரான் கோரகல்லி மடுவில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் சேகரித்து வைத்து வழங்கும் நீர்த்தாங்கி அமைக்கும் பணிகளையும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினரும் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் நேற்று களத்துக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

குறித்த திட்டத்திற்குத் தேவையான நீரை உன்னிச்சைக் குளத்திலிருந்து பெற்று தேக்கி வைத்து வழங்குவதற்காக சுமார் பத்து இலட்சம் லீற்றர் நீரைத்தேக்கி வைக்கத் தேவையான நீர்த்தாங்கி அமைக்கும் பணிகள் கிரான் கோரகல்லி மடுவில் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இதன் பணிகளை நிறைவுறும் பட்சத்தில் அடுத்த கட்டப்பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்விஜயத்தின் போது, அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் குறித்த நீர் சேகரிப்புத்தாங்கி அமைக்கும் வேலைத்திட்டத்தை மிக விரைவாக நிறைவு செய்யத்தேவையான ஆலோசனைகளை வழங்கியதுடன், இதனை முன்னெடுப்பதில் ஏற்படும் சிக்கல்கள், தாமதங்கள் தொடர்பிலும் அப்பணியில் ஈடுபட்டுள்ள பொறியியலாளர் குழுவினரிடம் கேட்டறிந்து கொண்டார்.

இவ்விஜயத்தின் போது, அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களுடன்   அவரது செயலாளர் ஏ.எம்.றபீக், முன்னாள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.முஹாஜிரீன் ஆசிரியர், எம்.என்.எம்.யாசீர் அரபாத், ஏ.எச்.சர்ஜூன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இத்தாங்கி அமைக்கும் பணிகள் சுமார்  40 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.WhatsApp Image 2017-09-25 at 1.04.15 PM WhatsApp Image 2017-09-25 at 1.04.28 PM WhatsApp Image 2017-09-25 at 1.04.39 PM WhatsApp Image 2017-09-25 at 1.04.47 PM WhatsApp Image 2017-09-25 at 1.04.51 PM WhatsApp Image 2017-09-25 at 1.04.53 PM WhatsApp Image 2017-09-25 at 1.04.56 PM WhatsApp Image 2017-09-25 at 1.04.59 PM WhatsApp Image 2017-09-25 at 1.05.04 PM WhatsApp Image 2017-09-25 at 1.05.06 PM WhatsApp Image 2017-09-25 at 1.05.09 PM WhatsApp Image 2017-09-25 at 1.05.13 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here