வாழைச்சேனை ஹைறாத் வீதிப்புனரமைப்பு தொடர்பில் அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் விஷேட கலந்துரையாடல்

0
321

3ஊடகப்பிரிவு
ஓட்டமாவடி சுற்று வட்டத்திலிருந்து வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் வழியாக வாழைச்சேனை பிரதான சந்தையைத்தொடும் மிகவும் பழமை வாய்ந்த அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீதி மிக நீண்ட காலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக மழைக்காலங்களில் குளமாகக் காட்சி தந்தது.

பல அரசியல்வாதிகள் தங்களது போக்குவரத்துக்காகவும் தேர்தல் காலங்களில் தங்களது வாக்குக்காகவும் இந்த வீதியைப் பயன்படுத்திக் கொண்டனரே தவிர, நாளந்த இதனூடாக பயணம் செய்யும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், நோயாளிகள், வியாபாரிகள் போன்றோரின் சிரமங்கள் தொடர்பில் எவரும் கண்டு கொண்டதாகவோ அக்கறை செலுத்தியதாகவோ தெரியவில்லை.

இதனைக் கருத்திற்கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினரும் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சியின் காரணமாக அதனை காபட் வீதியாகச் செப்பனிடுவதற்குத் தேவையான நிதி முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர அபிவிருத்தி வடிகாலமைப்பு அமைச்சருமான கெளரவ அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சினூடாக  ஒதுக்கீடு செய்யபப்ட்டு, அதற்கான அடிக்கல்லும் அண்மையில் அமைப்பாளர் றியாழ் அவர்களின் தலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்குபற்றுதலுடன் மிக விமர்சையாக இடம்பெற்றது.

பல்வேறு சிரங்களுக்கு, அரசியல் குறுக்கீடுகளுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட மேற்படி வேலைத்திட்டத்தை செய்ய விடாமல் தடுப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இப்பிரதேச மக்களின் நம்மை கருதி அதனைச் செய்து முடிக்கத்தேவையான நடவடிக்கைள் தொடர்பில் ஆராயும் விஷேட கூட்டம் நேற்று 25.09.2017 ம் திகதி திங்கட்கிழமை கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் வாழைச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலிலும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர் ரிழா அவர்களின் இல்லத்திலும் இடம்பெற்றது.

இவ்விஷேட கலந்துரையாடலில் மேற்படி திட்டத்தினை செயற்படுத்துதல் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இப்பணிகளை இடைநிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

பல்வேறு கருத்து பரிமாற்றங்களின் பின்னர் குறித்த வீதிக்கான புனரமைப்பு பணிகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் எனத்தீர்மானிக்கப்பட்டது.1 2 3 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here