கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய செயலமர்வு

Spread the love

DSC_0560(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியாவின் அனுசரணையில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இரண்டு நாள் இஸ்லாமிய செயலமர்வு கடந்த 23, 24 ம் திகதிகளில் மருதமுனை அக்பர் ஜும்ஆப்பள்ளிவாயலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய உணர்வையும் ஏற்படுத்துவதற்காக இடம்பெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல். முபாரக் மதனி, வைத்திய கலாநிதி டொக்டர் ரைசுதீன் ஷரஈ, இஸ்லாமிய அழைப்பாளர் ஏ.சீ.கே முஹம்மத் ரஹ்மானி, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத்தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, ஜம்இய்யாவின் நிர்வாகத்தலைவர் ஏ. ஹபீப் காஸிமி மற்றும் ஆசிரியர்களான ரீ.எல். அமானுல்லாஹ் ஷர்கி, எச்.எல்.முஹைதீன் பலாஹி ஆகியோர்கள் மாணவர்கள் மத்தியில் பல்வேறுபட்ட தலைப்புக்களில் விரிவுரைகளை வழங்கினார்கள்.

அத்தோடு, மாணவர்கள் மத்தியில் பொது அறிவை வளப்படுத்துவதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஆர்.ஜே.நயீம் அவர்களினால் அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியொன்றும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.DSC_0560 DSC_0573 DSC_0598 DSC_0685 DSC_0699 DSC_0703 DSC_0707 DSC_0737 DSC_0763 DSC_0784 DSC_0854 DSC_0861 DSC_0862 DSC_0863 DSC_0864 DSC_0865 DSC_0918

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*