ஓட்டமாவடி பாலிகாவில் அல் இஸ்லாஹ்வினால் நடைபாதை அமைப்பதற்காக ஆரம்ப நிகழ்வு

0
265

7நுசைக் அஹ்மத்

இளைஞர் கழகத்தின் YOUTH GOT TALENT செயற்றிட்டத்தினூடாக ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபாதை அமைப்பதற்காக ஆரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

மேற்படி திட்டம் மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அசெளகரிகங்களை நிவர்த்தி செய்யுமுகமாக பாடசாலை நிர்வாகம் மற்றும் இளைஞர் கழக சம்மேளன ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படுகிறது.

இவ்வேலைத்திட்டத்தின் அடிக்கல் நாட்டும் ஆரம்ப வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதிகளாக இளைஞர் சேவைகள் அதிகாரி BM.றியாத், பாடசாலை அதிபர் MAM.ஷாபிர் ஆகியோரும் அல் இஸ்லாஹ் இளைஞர் கழகத்தின் தலைவர் M.M.சம்ஹான் உட்பட பாடசாலையின் பிரதி அதிபர்கள்ம, ஆசிரியர்கள், இஸ்லாஹ்வின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தை பாடசாலையில் நடைமுறைப்படுத்த சகல வழிகளிலும் பங்காற்றிய பாடசாலை ஆசிரியர் KRM.இர்சாத் அவர்களும் இணைந்து சிறப்பித்தார்.

இத்திட்டம் இனிதே நிறைவேற உதவிய அனைத்து நல்லுங்களுக்கும் அல் இஸ்லாஹ் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.1 2 3 4 5 6 7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here