புளொட் சுவிஸ் கிளையினர் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனுடன் சந்திப்பு

Spread the love

IMG_3480aஐ.நா. சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக சுவிஸ் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டிபிஎல்எப்) உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் சுவிஸின் Schweighof strasse 296, 8055 Zurich என்னுமிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டிபிஎல்எப்) உறுப்பினர்கள், ஆதரவாளர்களுடனான இக்கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், வடமாகாண சபையில் நிலவும் பிரச்சினைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, தெளிவான பதில்களும் வடமாகாண சபை உறுப்பினர் திரு பா.கஜதீபன் அவர்களினால் வழங்கப்பட்டது.

நீண்ட நேரமாக ஆரோக்கியமாக நடைபெற்ற கலந்துரையாடல், அமைதி வணக்கத்துடன் மாலை ஆறு மணி நிறைவுக்கு வந்தது. IMG_3261a IMG_3301a IMG_3304a IMG_3306a IMG_3480a

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*