பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்-பிரதியமைச்சர் அமீர் அலி

0
229

01 (11)எஸ்.எம்.எம்.முர்ஷித்

கால் நடை பண்ணையாளர்கள் தங்களது தொழிலை நவீன முறையில் பயன்படுத்துவதன் மூலம் அதிக வருமானங்களை ஈட்டிக்கொள்ளலாம் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழியங்கும் மில்கோ நிறுவனத்திற்கு பால் வழங்கும் கல்குடாத்தொகுதி பால் பண்ணையாளர்களுடனான சந்திப்பு ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் செவ்வாய்கிழமை மாலை  மில்கோ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் கே.கனகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கால்நடைகளை வளர்ப்பதில் தமது மூதாதையர்கள் காட்டித்தந்த வழியிலே இருக்காமல் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தங்களது தொழிலிலும் அபிவிருத்திகளைச் செய்வதன் மூலம் நாளொன்று இரண்டு லீற்றர் பால் கரப்பதை இருபது லீற்றராக மாற்ற முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், தங்களுடைய பிள்ளைகளின் கல்வி அறிவை மேம்படுத்த பெரிதும் உதவியாகக் காணப்படும் என்றார்.

இச்சந்திப்பின் போது கதிரவெளி, மாங்கேணி, சித்தாண்டி, சோமபுர பால் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரிடம் தெரிவித்தனர்.

எனவே, பால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பால் நிலையங்களைத்திருத்துதல், மேய்ச்சல் தரை பிரச்சனை, நல்ல இன பசு மாடுகள், யானைப்பிரச்சனை, குடிநீர்ப்பிரச்சனை போன்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது, கதிரவெளி, மாங்கேணி, சித்தாண்டி, சோமபுர போன்ற பிரதேச பால் பண்ணையாளர்கள் பதினொரு பேருக்கு குடும்பத்தில் இடம்பெற்ற சுப நிகழ்வுக்கு நன்கொடையாகக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11) 01 (12) 01 (13)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here