அன்வர் முஸ்தபாவின் அழைப்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அம்பாறைக்கு விஜயம்

0
213

FB_IMG_1506625034146-கலைமகன் –
சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாளர் நாயகமும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக் குழுவின் இலங்கைக்கான சமாதான தூதுவருமான அன்வர் எம் முஸ்தபா அவர்களின் அழைப்பையேற்று இன்று (28) இலங்கைக்கான தற்போதைய பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் வைத்திய கலாநிதி சப்ராஸ் A.K.சிப்ரா அவர்கள் நேற்று அம்பாறைக்கு விஜயஞ்செய்தார்.

சுனாமியால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கமு லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்துக்கு இலங்கைக்கான தற்போதைய பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் வைத்திய கலாநிதி சப்ராஸ் AK.சிப்ரா அவர்கள் திடீர் விஜயத்தை மேற்கொண்டு அப்பாடசாலையின் குறைகளையும், தேவைகளையும் அதிபர், ஆசிரியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்தும் புதிய பல வசதிகளுடன் அமையப்பெற்றுள்ள சாய்ந்தமருது சிம்ஸ் கேம்பஸ் அலுவலகத்துக்கு விஜயஞ்செய்து பிரதேச மாணவர்களினதும், பிரதேசத்தினதும் கல்வி நிலை பற்றி அறிந்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து சம்மாந்துறை அக்ரோ குரூப்பின் விதை உற்பத்தி நிலையத்துக்கு விஜயஞ்செய்த இலங்கைக்கான தற்போதைய பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் வைத்திய கலாநிதி சப்ராஸ் AK.சிப்ரா அவர்களடங்கிய குழுவினர் அந்த நிலையத்தை பார்வையிட்டதுடன், எமது பிரதேச விவசாயிகளின் நிலைமைகளையும் இன்னல்களையும் விரிவாக அறிந்து கொண்டதுடன், சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம்.முஸ்தபா அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்ட உழவு இயந்திரத்தையும் பார்வையிட்டதுடன், மேலும் பல உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த சுனாமி அனர்த்த அவசர நிலையைக் கவனத்திற்கொண்டு அன்வர் எம்.முஸ்தபா அவர்களின் வேண்டுகோளையேற்று பாகிஸ்தானிய அரசினால் கல்முனை அஸ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிட்ட தக்கது.FB_IMG_1506625034146 FB_IMG_1506625049293 FB_IMG_1506625057233 FB_IMG_1506625068376 FB_IMG_1506625075527

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here