ஷிப்லி பாறுக்கின் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷன் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் கௌரவிப்பும்

0
236

5-IMG_7644(பழுலுல்லாஹ் பர்ஹான் & எம்.ரீ. ஹைதர் அலி)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷன் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் கௌரவிப்பும் 27 நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஷிபா பௌண்டேஷன் நிருவாக சபை உறுப்பினர் நவ்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், தமிழ், முஸ்லிம் முழு நேர மற்றும் பகுதி நேர ஊடகவியலாளர்கள், கிழக்கு மகாண சபை உறுப்பினரின் ஊடகப்பிரிவைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஷிபா பௌண்டேஷன் தலைவருமான ஷிப்லி பாறூக்கினால் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷனின் சின்னம் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்யப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபாவின் நெறிப்படுத்தலின் கீழ் ஊடகவியலாளர்களின் ஊடகப்பங்களிப்பினைப் பாராட்டுமுகமாக இடம்பெற்ற ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் தேசிய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களைச்சேர்ந்த தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களான எஸ்.எம்.எம்.முஸ்தபா, உதயகுமார் உதயகாந், அந்தோனி லியோன் ராஜ், பழுலுல்லாஹ் பாஸூல் பர்ஹான், வாலசிங்கம் கிருஷ்ணகுமார், எஸ்.சதீஸ்குமார், எம்.எச்.எம்.அன்வர், ஏ.எல்.டீன் பைறூஸ், யூ.ஏ.றஹ்மான், எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ், எம்.ஐ. அப்துல் நஸார் இணையம் மற்றும் குறுஞ்செய்திச்சேவை ஊடகவியலாளர்களான  எம்.எப்.எம்.பஸால் ஜிப்ரி, எம்.எஸ்.அப்துல் கையூம், எம்.எம்.எம்.அஸீம், கிழக்கு மகாண சபை உறுப்பினரின் ஊடகப்பிரிவைச்சேர்ந்த ஊடகவியலாளர்களான எம்.ரீ.கைதர் அலி, ஏ.எம்.சமீம் ஆகியோர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷனின் முதலாவது சேவை ஊடகவியலாளர் கௌரவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.1-IMG_7625 2-IMG_7630 3-IMG_7634 4-IMG_7638 5-IMG_7644 6-IMG_7648 7-IMG_7656 8-IMG_7660 9-IMG_7669 10-IMG_7672 11-IMG_7676 12-IMG_7679 13-IMG_7684 14-IMG_7688 15-IMG_7692 16-IMG_7696 17-IMG_7709 20-IMG_7622

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here