உலகின் 49ஆவது பணக்காரராக மஹிந்த

0
96

mahindaஎம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்

கடந்த ஆட்சியில் மஹிந்தவும் மஹிந்தவின் குடும்பத்தினரும் அவரது சகாக்களும் கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொள்ளையடித்தனர் என்றும் அந்தப்பணம் வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் கறுப்புப்பணமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதென்றும்  அரசு  குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்தப்பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணம் தொடர்பில் 36 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 86 கோப்புகள் மீதான  விசாரணைகளில் 40 கோப்புகள் மீதான விசாரணைகள் முடிவுற்று, அதன் பெறுபேறுகள் இலங்கை அரசுக்கு வரத்தொடங்கியுள்ளன என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், துபாய் வங்கியில் மஹிந்தவினதும் அவரது மகன் நாமலினதும் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாம்.

மஹிந்தவின் கணக்கிலிருக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாவாம். கேட்கும்போது தலையே சுற்றுகிறது. இது உண்மையென்றால், மஹிந்த சர்வதேசளவில் 49ஆவது பணக்காரராம்.

அப்போ இன்னும் சிறிது காலம் ஆட்சியில் இருந்திருந்தால் பிள்கேட்ஸை முந்தி இருப்பார் போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here