முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியால் கிண்ணியா தள வைத்தியாசாலை தரமுயர்வு

0
293

kinniya base hospital(பிறவ்ஸ்)
கிண்ணியா தளவைத்தியசாலை B தரத்திலிருந்து A தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சரினால் 20ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பியசுந்தர பண்டாரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்திலேயே கிண்ணிய வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா மக்களின் நீண்ட காலக்கோரிக்கையாக இருந்து வந்த கிண்ணியா தளவைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பில், தௌபீக் எம்.பி. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதாரப்பிரதியமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோர் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையை தரமுயர்த்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் பேச்சுவார்த்தைகள் நடந்தியிருந்த நிலையிலேயே, வைத்தியசாலை தற்போது தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here