மாகாண சபைத்தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்-கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
79

16244196_1396486920370227_835759549_nமாகாண சபைகளுக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்வைத்த தீர்மானத்திற்கு கிழக்கு மாகாண சபை ஏகமனதாக வாக்களித்தது.

ஆளுனருக்கு  அதிகாரம் வழங்கப்படுவதென்பது மக்களாட்சி முறைமைக்கெதிரானதாகுமெனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அவசர காலச்சட்டங்களில் மாத்திரமே ஆளுனருக்கு ஆட்சியில் பங்கேற்கக்கூடிய சாத்தியப்பாடு அரசியலமைப்பிலுள்ளதையும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது  சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்திற்கு முரணாக மக்களால் தமது மாகாண சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளதாக கிழக்கு மாாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மக்களால் தெரிவு செய்யப்படாத ஒரு தனி நபரிடம்  ஆட்சியைக்கையளிப்பது சர்வாதிகாரப்போக்குடைய  நிலைமையை   மாகாணத்தில் ஏற்படுத்துமெனவும் கிழக்கு முதல்வர் கூறினார்.

ஆலோசனைகளைப் பெறுவதற்கு அமைச்சர்களின்றி மாகாணம் தொடர்பாக தன்னிச்சையாக முடிவுகளை  எடுப்பதற்கான அதிகாரம்  ஆளுனருக்கு வழங்கப்படுவது சிறுபான்மையினர் செறிந்து  வாழும் கிழக்கில் மீண்டும் பழைய  நிலைமையை ஏற்படுத்த முயல்கின்றனரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

நாம் தான் ஆட்சியில் நீடிக்க வேண்டுமென்ற எந்தவொரு எண்ணப்பாடும் எங்களுக்கில்லையென்பதுடன், நாங்கள் கோருவதெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் மக்களை ஆள வேண்டுமென்பதேயாகும். அதற்கு  மாகாண சபைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

மாகாண சபைத்தேர்தல்கள் காலந்தாழ்த்தாது உடனடியாக நடத்தப்பட வேண்டுமென்ற தீர்மானத்திற்கு ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்த்துடன், எதிர்த்தரப்பு  உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here