அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி பொத்துவில் றைஸ் ஸ்டார் வெற்றி-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்

0
319

IMG_9850(அகமட் எஸ். முகைடீன்)
மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 17 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு பொத்துவில் டில்ஷாத் அஹமட் பவுண்டேஷன் நடாத்திய தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த கிண்ணம் 2017 மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை பொத்துவில் றைஸ் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினர் தனதாக்கிக் கொண்டனர்.

பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 14 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிய அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட குறித்த கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வு நேற்று (30) சனிக்கிழமை மாலை பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது, பொத்துவில் எலைட் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பொத்துவில் றைஸ் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினர் விளையாடினர்.

பொத்துவில் டில்ஷாத் அஹமட் பவுண்டேஷனின் தலைவர் என்.ரி. ராசுதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விறுதிப்போட்டி நிகிழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஷித், பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த குமார, விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் நௌபர் ஏ. பாவா எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற றைஸ் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களைப்பெற்றனர். வெற்றி இலக்கான 85 ஒட்டங்களை பெறும் வகையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எலைட் விளையாட்டுக்கழகத்தினர் சகல பந்துவீச்சுக்களும் நிறைவடைந்த நிலையில் 6 விக்கட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இப்போட்டியில் மேலதிக 25 ஓட்டங்களால் பொத்துவில் றைஸ் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினர் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை கொட்டுக்கல் எஸ்.ஆர் விளையாட்டுக்கழக வீரர் எம். அறபாத்தும், சிறந்த அணிக்கான விருதை ஹுதா விளையாட்டுக்கழகமும், தொடரின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை எலைட் விளையாட்டுக்கழக வீரர் எம். றியாசும், ஆட்ட நாயகன் விருதை றைஸ் ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர் எம். பாறுக்கும் பெற்றுக்கொண்டனர்.IMG_9804 IMG_9812 IMG_9823 IMG_9824 IMG_9825 IMG_9826 IMG_9840 IMG_9842 IMG_9843 IMG_9845 IMG_9847 IMG_9850

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here