பொத்துவில் அல்-அக்ஸாவின் மைதானம் புனரமைக்கப்படும்-பிரதியமைச்சர் ஹரீஸ்

0
215

IMG_9763(அகமட் எஸ். முகைடீன்)
சிறுவர் தினத்தை முன்னிட்டு பொத்துவில் அறுகம்ப இங்லிஸ் ஹோம் பாலர் பாடசாலையின் விளையாட்டுப்போட்டி சின்ன உல்லை அல்-அக்ஸா வித்தியாலய மைதானத்தில் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் ஏ.எச். அன்வர் தலைமையில் நேற்று (30) சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ வாஷித், பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த குமார, அல்-அக்ஸா வித்தியாலய அதிபர் ஏ.ஜே.எம். கரீம், செங்காமம் அல்-மினா வித்தியாலய அதிபர் என்.ரி. ராசுதீன், விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் நௌபர் ஏ. பாவா, பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அல்-அக்ஸா வித்தியாலய அதிபர் .ஜே.எம். கரீம் மற்றும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ வாஷித் ஆகியோர் விடுத்த வேண்டுகோளையேற்று குறித்த பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாக விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் இதன் போது உறுதியளித்தார்.

அத்தோடு, அப்பாடசாலையின் ஆராதனை மண்டபத்தையும் புனர்நிர்மாணம் செய்வதற்குத்தேவையான நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் பிரதியமைச்சர் இதன் போது உரையாற்றுகையில் தெரிவித்தார்.IMG_9717 IMG_9718 IMG_9734 IMG_9735 IMG_9736 IMG_9737 IMG_9742 IMG_9744 IMG_9746 IMG_9747 IMG_9753 IMG_9759 IMG_9760 IMG_9763 IMG_9765 IMG_9766 IMG_9769 IMG_9776

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here