ரோகிங்கிய முஸ்லீம்களைத்தாக்கியோர் கைது-நீதிமன்றத்தில் ஆஜர்-விளக்கமறியல் நீடிப்பு

0
190

11(அஸ்ரப் ஏ சமத்)
கொழும்பு, கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவிரால் நேற்று (1) மு.ப.கல் 12.00 மணிக்கு கல்கிசை மஜிஸ்ட் ரேட் நீதிமன்றத்தில் 5 சந்தக நபா்கள் பொலிசாரினால் ஆஜா்படுத்தப்பட்டனா்.  இவா்கள் கடந்த வாரம் கல்கிசையிலுள்ள மியன்மாா் ரோகிங்கிய முஸ்லீம்கள் தங்கியிருந்த  ஜக்கிய நாடுகள் அகதி வீட்டைத்தாக்கியதாகவும் ரோகிங்கிய முஸ்லீம்களைத் தாக்க எத்தணித்தாகவும் தெரிவித்தனா்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரீன் சீ.சீ. ரீ கமரா  ஊடகாவே இவா்கள் அடையாளங் காணப்பட்டனர். நேற்று முன் தினம் இரவு  அதிதீவிரப் போக்குடையவரும் இனவாதப் பிரச்சினைகளுக்கு முக்கிய நபராகவுமுள்ள டான் பிரசாத்தும் அவருடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன், மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 2 குழந்தைகளின் தாயான விதவைப் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், மொரட்டுவை பிரதேசத்தில் அங்குலானையில் வசிக்கும் ஒருவா் கடந்த பாராளுமன்றத்தோ்தலில் பொதுபலசேனா ஊடாகப்போட்டியிட்டவா் எனவும் அடையளாங் காணப்பட்டுள்ளார்.

கல்கிசை மஜிஸ்ரேட் நீதவான் முஹமட்  அவா்களின் விசாரணையின் போது, இவா்களை எதிா்வரும் 9ம் திகதி வரை  அணிவகுப்பு மரியாதைக்கு ஆஜா்படுத்தும்படியும் கட்டளையிட்டாா்.  இவா்கள் சாா்பாக ஆஜரான சட்டத்தரணி அஜித்  பிரசாத் பிணை கோரியும் இவா்கள் 9ஆம் திகதி வரை அணிவகுப்புக்குட்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்படவுள்ளதால் பிணை வழங்க முடியாதெனத் தெரிவித்தார்.

இதன் போது, கல்கிசை நீதிமன்றம் பொலிசாரினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டவா்களது   ஆதரவாளா்கள், உறவினா்கள், நீதிமன்ற வளவில் பெருமளவில் காணப்பட்டனா்.

மேலும், கல்கிசை வீட்டினைத்தாக்கியவா்களும் இதில் சம்பந்தப்பட்டவர்களும் பொலிசாரினது சீ.சீ.ரீ கமராவின் மூலம் பொலிசாரினால் மேலும் தேடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதே வேளை, குற்றவாளிகள் சாா்பாக ஆஜரான சட்டத்தரணி அஜித் பிரசாத் நேற்று (1) கல்கிசை நீதிமன்றில் வைத்து  ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்,

இந்தச்சம்பவத்தின் மூலம் பொலிசாா் அப்பாவிகளைக் கைது செய்துள்ளாா்கள். ஆனால், உண்மையாக இதற்குப் பின்னால்  பொலிசாா் ஒருவரின் மனைவியும், உறவினா்களும் உள்ளனா். ரேங்கியா முஸ்லீ்ம் பெண்னை  பாலியலுக்குட்படுத்திய பொலிசாரை இதுவரை கைது செய்யவில்லை. இவா் தற்காலிகமாக தொழில் இடை நிறுத்தப்பட்டுள்ளாா்.

இந்தச்சம்பவத்திற்குப் பின்னால் அவரது குடும்பம், மனைவி அவா்களது  உறவினா்கள் தான் அன்றைய தினம் இத்தாக்குதலுக்கு வந்துள்ளாா்கள். இதுவரை ஏன் சீ.சீ.ரீ கமரா ஊடாக அவா்களைக்கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட வில்லை.

பாலியலுக்குட்படுத்திய பொலிசாரே இந்தச்சம்பவத்திற்குப் பின்னாலுள்ளாா். இவ்வகதிகளை கழகம் ஏற்படுத்தி, நாட்ட விட்டு வெளியேற்றினால், பாதிக்கப்பட்ட ரோகிங்கிய பெண் நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜராகமால், வழக்குத் தள்ளுபடியாகி விடும். என எண்ணி அவா்களை நாட்டை விட்டு வெளியேற்ற இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

நுகோகொடை நீதிமன்றில் பீ-2030-17 என்ற இலக்க வழக்கு குலராத்தின வாஸ் என்ற இப்பொலிஸ் அதிகாரிக்கெதிராகவுள்ளது.

நோய் வாய்ப்பட்டு களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 வயதுடைய ரோகிங்கிய பெண் அகதியை மீள அழைத்துச்செல்ல வந்த இந்தப்பொலீஸ்- மீரிகான முகாமுக்கு அழைத்துச் செல்வதாக வைத்தியசாலையில் தெரிவித்து விட்டு, அப்பெண்னை ஒரு நாள்  தனியானவொரு வீட்டுக்குச்கூட்டிச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளாா்.   அந்த வழக்கு விசாரணைகள் நுகேகொட மீரிகான நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

இது சம்பந்தாக  பொலிஸாா் ஏன் இதுவரை உரிய குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை? அப்பாவி பெண்கள் அவ்விடயத்தில் ஜ.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தங்கியுள்ளதாக சில வீடியோ முகநுால் காட்சிப்படுத்தியதையிட்டே கைது செய்யப்பட்ட  அப்பாவி மக்கள் அவ்விடத்தில் வந்தனா்.

அவா்களையே பொலிசாா்  கைது செய்துள்ளனா். இங்கு கைது செய்யப்பட்ட பெண் இரண்டு குழந்தைகளின் தாய். அவா் ஒரு விதவை. அவா் தற்போது கைது செய்யப்பட்டதால், அவரின் குழந்தைகளில் ஒரு ஆசிரியா் வீட்டில் தங்க வைக்க நோ்ந்துள்ளது.

ஆகவே, அரசாங்கமும் பொலிசாா் மாஅதிபரும் முதலில் மானபங்கப்படுத்திய பொலிசாரையும் தூண்டுதலுக்கு வந்த  மதவாத பெளத்த மதக்குருக்களையும் கைது செய்யுங்கள். இந்த பொலிசாருக்கு பாலியல் குற்றத்தின்படி 20 வருடம் சிறை தடுவம் வழங்க வேண்டும்.

இந்த பொலிசாாின் உறவினா்கள் துாண்டுதலுக்கே அப்பாவி மக்களை வேறு திசைக்குத் திருப்பியுள்ளனா். முதலில் நமது பௌத்த கொள்கைக்கேற்ப தர்மம், நீதி வேண்டும். அப்பாவிகளைப் பலிகாடக்கி விட்டு, அவா்கள் தப்பித்துள்ளனர். உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யுங்கள் என சட்த்தரணி அஜித் தெரிவித்தாா். 11 m2 m3 m4 m7 m9 m10 m11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here