மூன்று பாடசாலைக் கட்டடத்தொகுதிகளுக்கு சமூகத்தலைமைகளின் பெயர்களைச் சூட்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நடவடிக்கை

0
195

DDFV-7868எம்.ரீ.ஹைதர் அலி
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியின் பலனாக கிழக்கு மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் இரண்டு கோடி ரூபாய் செலவில் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்திற்கான இரண்டு மாடிக் கட்டடத்தொகுதி, இரண்டு கோடி ரூபாய் செலவில் காத்தான்குடி ஜாமியுள் ஆபிரீன் வித்தியாலயத்திற்கான இரண்டு மாடிக் கட்டடத்தொகுதி மற்றும் சுமார் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபாய் செலவில் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்திற்கான மூன்று மாடிக் கட்டடத்தொகுதி என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

மிகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டங்கள் மிக விரைவில் பூரணப்படுத்தப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கட்டடத் தொகுதிகளுக்காக பெயர்களைச் சூட்டுவதற்காக தீர்மானிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் பணிப்புரைக்கமைய மெத்தைப்பள்ளி வித்தியாலய கட்டடத்தொகுதிக்கு “அஷ் ஷஹீட் அஹமட்லெப்பை கட்டடத்தொகுதி” என்றும், அன்வர் வித்தியாலயம் மற்றும் ஜாமியுள் ஆபிரீன் பாடசாலை கட்டடத்தொகுதிகளுக்கு சங்கைக்குரிய அல்ஹாஜ் “ஷெய்ஹுல் பலாஹ் கட்டடத்தொகுதி” என்றும் பெயர் சூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாடசாலைக் கட்டடங்கள் உள்ளிட்ட பொதுக்கட்டடங்களுக்கு எவ்வித இலாப நோக்கமுமற்ற விதத்தில் சமூகத்திற்காகச் சேவையாற்றி மறைந்த பெரியார்களின் பெயர்களைச்சூட்டுவதானது, அவர்களின் விலை மதிப்பற்ற சேவையினைக் கௌரவிப்பதாக அமைந்துள்ளதோடு, அரசியல் இலாப நோக்கங்களுக்காக மக்களின் பணங்களினூடாக நிர்மாணிக்கப்படும் பொதுக்கட்டடங்களுக்கு அரசியல்வாதிகள் தங்களுடைய பெயர்களைச் சூட்டிக்கொள்ளும் அரசியல் கலாசாரத்திற்கெதிரான சிறந்த முன்னுதாரணமாகவும் இது அமைந்துள்ளது.Anver School - 1 Anver School - 2 Jaamiyul Aafireen School - 1 Jaamiyul Aafireen School - 2 Meththaippalli School - 1 Meththaippalli School - 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here