கிழக்கை வடக்குடன் இணைக்கும் அரசியலமைப்பு அபாயச்சூழ்ச்சிக்கெதிரான மக்கள் பேரணி-கிழக்கு மக்கள் அவையம் அழைப்பு

0
193

c cகிழக்கு மாகாண மக்களின் கையுதிர்க்க முடியாத இறைமை அதிகாரத்தினை மீறும் வகையில் கிழக்கு மக்களின் அபிப்பிராயங்களைக் பெறாமல் விசேடமாக கிழக்கு முஸ்லீம்களுடன் கலந்துரையாடாமல் கிழக்கு மாகாணத்தினை வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கான அரசியலமைப்பு மாற்ற சூது நிகழச்சி நிரலொன்று அரங்கேற்றப்படுவதாகத் தெரிகிறது.

கிழக்கு மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார விடங்கள் தொடர்பான புலமையாளர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் இணைந்து துறைசார் புலமைத்துவ ஆலோசனைகளுடன் இயங்குவதற்கான தளமாகவே கிழக்கு மக்கள் அவையம் உருவாக்கப்பட்டது.

அண்மையில் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையினை கிழக்கு மக்கள் அவையம் மிகக்கவனமாக ஆராய்ந்து வருகின்றது. பூர்வாங்க ஆய்வுகளின்படி குறித்த இடைக்கால அறிக்கை கிழக்கு மாகாண  மக்களின் அரசியல் பெறுமதி, இறைமை, பொருளாதாரம், வாழ்வியல் மற்றும் சகவாழ்வு என்பவற்றைக் கடுமையாகப் பாதிக்கும் தன்மையுடையதாகக் காணப்படுவதாக உணர முடிகிறது.

இந்நிலையில், குறித்த அறிக்கை தொடர்பில் துறைசார் புலமையாளர்களுடன் ஆழமான கருத்துப் பறிமாறல்களையும் அவையம் மேற்கொண்டு வருகின்றது.

இதற்கு சமாந்தரமாக கிழக்கு மாகாண மக்கள் ஒன்றிணைந்து இந்த அரசியலமைப்பு மாற்ற சூழ்ச்சியின் மூலம் கிழக்கு மக்களை அடிமைப்படுத்த எடுக்கும் முயற்சிகளைத் தோற்கடிக்க வேண்டியுள்ளது. இதற்காக விழிப்புணர்வுகளையும் பேரணிகளையும் மற்றும் எழுச்சிப்பிரகடணங்களையும் மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் கிழக்கு மக்கள் அவையம் ஈடுபட்டு வருகின்றது.

எனவே, இந்த முயற்சியில் பங்களிக்க விரும்புகின்ற, பங்கெடுக்க விரும்புகின்ற மற்றும் தோள் கொடுக்க விரும்புகின்ற சகோதரர்கள், சகோதரிகள், நிறுவனங்கள், கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் எம்மைத்தொடர்பு கொள்ளுமாறு இத்தால் வேண்டுகிறோம்.

சட்டத்தரணி மர்சூம் மௌலானா (077 4747235)
சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் (077 3178783) baheejm@gamil.com
இணைச் செயலாளர்கள்
2017.10.01Capture

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here