யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஜனாஸா (சடலம்) குளிப்பாட்டுமிடம் புனரமைப்பு

0
235

janaza4பாறுக் ஷிஹான்
கடந்த கால யுத்தத்தினால் அழிவடைந்த நிலையிலிருந்த யாழ் சின்னப்பள்ளிவாயல் மையவாடித் தேவைக்கென ஆரம்பத்தில் புழக்கத்திலிருந்து வந்த மடம் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜனாஸா நல்லடக்க்கத்தை நோக்கமாகக் கொண்டு மீண்டும்  புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தலைவர் நபாயிஸ், செயலாளர் ராஜன் மற்றும் நிர்வாகத்தினரின் முயற்சியில் குறித்த மடம் புனரமைக்கப்பட்டு மீண்டும் யாழ் சின்னப்பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மடம் கையளிக்கும் நிகழ்வில், யாழ் ஒஸ்மானியாக்கல்லூரி அதிபர் எம்.சேஹு ராஜித், யாழ் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தலைவர் எம்.ஐ  நபாயிஸ், யாழ் ஜனாஸா நலன்புரிச்சங்கத்தலைவர் எம்.ஜெ.எம்.முஜாஹித், யாழ் சின்னப்பள்ளிவாயல் செயலாளர் எம்.எல்.நிராஸ் மற்றும் பேஸ் இமாம் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி மடத்தின் கட்டுமானப்பணிகளுக்கான முழுச்செலவீனத்தையும் எஸ்.எச்.நியாஸ் ஹாஜியார் மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.janaza1 janaza2 janaza3 janaza4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here