கிடச்சிமடு பாலத்தினை அமைக்க முயற்சியெடுத்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு நன்றிகள்-சாட்டோ மன்சூர் (வீடியோ)

0
266

கவர் போட்டோஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
மட்டக்களப்பு-கல்குடாத்தொகுதி ஓட்டமாவடி பிரதேச சபை, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம், புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவு ஆகிய நிருவாகப் பிரிவுகளுக்குட்பட்ட கிடச்சி மடு விவசாயக் கிராமத்திற்குச் செல்லும் விசர் ஓடை ஆற்றுக்கான பாலம் இதுவரை காலமும் அமைக்கப்படாமையினால் பாரிய சவால்களை குறித்த பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாய சமூகம் எதிர்நோக்கி வருகின்றமை சம்பந்தமாக கடந்த 2016.12.23ம் திகதி சமூக ஆர்வலர் சாட்டோ மன்சூர் ஊடகங்களுக்கு கருத்துக்களை காணொளி மூலம் வெளியிட்டு சமூகமயப்படுத்தியிருந்தார்.

குறித்த பாலத்தினை அமைப்பதனூடாக ரிதிதென்ன புகையிரத நிலையத்திற்கு முன்பாகச்செல்லும் விவசாயப்பாதை முடிவில் காணப்படும் குறித்த ஆற்றுக்கான பாலம் அமைத்தல் புனாணை மேற்கு ஆறு கண்டங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவரும் பெரும் நன்மையடைவார்கள் என்பதனைச்சுட்டிக்காட்டுவதே சாட்டோ மன்சூரின் ஊடக அறிக்கையின் பிரதான காரணமாக அமைந்திருந்தது.

மேலும், குறித்த விடயத்தினை மையமாக வைத்து, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அபிவிருத்திகள் மிகமுக்கியமான விடயமாக கல்குடாப்பிரதேசத்தில் பேசப்பட்டு வருவதினாலும், ஜெயந்தியாய கிராமத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பல்கலைக்கழகத்தினை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தனிப்பட்ட முயற்சியினால் அமைகப்படுவது முக்கிய விடயமாகும்.

ஆகவே, விவசாயிகள் எதிர்நோக்கும் முக்கிய போக்குவரத்துப் பிரச்சனையாக இருக்கின்ற குறித்த கிடச்சிமடுவிற்குச் செல்லும் விசர் ஓடை பாலத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியிலும் ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரதேசங்களில் தனக்கென நிரந்தர வாக்கு வங்கியினைக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதியான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்திற்கு கல்குடா விவசாய சமூகத்தின் குறித்த பிரச்சனையினை மக்களின் சார்பாக சமர்ப்பிப்பதாக சமூக ஆர்வலர் சாட்டோ வை.எல்.மன்சூர்  மேலும் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதன் பலனாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் பிரதியமைச்சர் அமீர் அலியையும் இணைத்துக் கொண்டு பல மில்லியன் ரூபாய்களை ஒதுக்கி, குறித்த புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதற்கு தனது நன்றிகளை குறித்த விவசாய சமூகம் சார்பாகவும், கல்குடா மக்கள் சார்பாகவும் குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் சாட்டோ மன்சூர் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.

மன்சூர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ-
www.youtube.com/watch?v=i9D6qS_8qoI&feature=youtu.be
கவர் போட்டோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here