வடமாகாணத்தில் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

0
88

application_orig-750x400பாறுக் ஷிஹான்-
வடமாகாணத்தில் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய உயர்தரப்பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும் சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்தவர்களும் தாதியர்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளரும் உப தலைவருமான பாலசிங்கம் சிவயோகம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வடமாகாணத்தில் உயர்தரப்பரீட்சையில் உயிரியல் மற்றும் கணிதம் உட்பட 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும் சாதாரண தரப்பரீட்சையில் தமிழ், கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தாதியராக விரும்புபவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய சங்கத்தலைவர் பாலசிங்கம் சிவயோகம் 0713526234 என்ற தொலைபேசி இலக்கத்துடனும்shivajokam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

குறிப்பாக, 18 வயது முதல் 28 வயதுடைய தாதிய பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பியவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here