ரோஹிங்ய விவகாரம் தொடர்பில் சவூதியில் உயர் மட்டப்பேச்சு-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

22089122_1461493353933071_3232540101484807813_nஆர்.ஹசன்
சவூதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்ய முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்ய அகதிகளுக்கான நிவாரணப்பொருட்களை விநியோகித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் சவூதியில் உயர் மட்டப்பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை ஜித்தாவைச் சென்றடைந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும் இளவரசருமான பஹத் பின் அப்துல் அஸீஸின் செயலாளர் உள்ளிட்ட உயர் குழுவினரால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் விஜயத்தின் போது, சவூதி அரேபியாவின் அரச உயரதிகாரிகளையும், சர்வதேச இஸ்லாமிய நிறுவனத்தினுடைய செயலாளர் நாயகம், சவூதி இளவரசர் பஹத் பின் அப்துல் அஸீஸ் உள்ளிட்ட பல்வேறு அரச தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

இதன் போது, சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்ய முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள்  தொடர்பாகவும், பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்ய அகதிகளுக்குத் தேவையான நிவாரணப்பொருட்களை விநியோகிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 22089122_1461493353933071_3232540101484807813_n 22154405_1461489000600173_2715480021233995736_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>