பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரனின் நிதியில் வீதி அமைக்கும் பணிகள் ஆரம்பம்

0
214

roadஎஸ்.எம்.எம்.முர்ஷித்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தார் வீதி அமைப்பதற்காக 6 கோடி ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தார் வீதி அமைக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

அந்த வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதியொதுக்கீட்டின் மூலம் வந்தாறுமூலை மாவடிவேம்பு எல்லை வீதி தார் வீதியாக மாற்றுவதற்காக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வந்தாறுமூலை – மாவடிவேம்பு எல்லை வீதியானது, பன்னெடுங்காலமாக மக்களின் போக்குவரத்திற்கு சாதகமற்ற நிலையில் காணப்பட்டது. இவ்வீதியின் குறைபாடுகள் புனரமைக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோள் மாவடிவேம்பு கிராம மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் கோரப்பட்டதற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தார் வீதி அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 கோடி ரூபா நிதியிலிருந்து ஒரு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேற்படி வீதி தார் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

இதன் போது, பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வீதி புனரமைக்கும் பணியினை ஆரம்பித்து வைத்துள்ளார்.road

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here