மட்டு.புனித மிக்கேல் கல்லூரியின் 144வது கல்லூரி தினத்தைச் சிறப்பிக்குமுகமாக மர நடுகை நிகழ்வு

0
240

image-0-02-06-5d356945ae4d478008982173b2ae9a4541220fd26a2d1354480c04837d95c74b-Vஎஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 144வது கல்லூரி தினத்தைச் சிறப்பிக்குமுகமாக  கல்லூரியின் 2012ம் ஆண்டு உயர்தரப்பிரிவு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வானது கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பின் இயற்கை வளங்களைப் பேணிப்பாதுகாப்பது மட்டுமல்லாது, அதனை மென்மேலும் அழகுபடுத்தி வளப்படுத்தும் விழிப்புணர்வையும், பாரிய சமுகப்பொறுப்பையும் மட்டக்களப்பு வாழ் சமுகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் ஏற்படுத்தும் நோக்கோடு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் அமைந்துள்ள புதிய வீதியானது இனங்காணப்பட்டு மரநடுகைச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன், பொது மக்களையும் மர நடுகைச் செயற்பாட்டில் ஊக்கத்துடன் ஈடுபடுத்தும் நோக்கோடு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்புப் படைப்பிரிவினர், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மரநடுகை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.image-0-02-06-5d356945ae4d478008982173b2ae9a4541220fd26a2d1354480c04837d95c74b-V image-0-02-06-047fc4fe864ba875485451347a21831ab2caae038bac1e5a9a7a4a0552d2a4fc-V image-0-02-06-8202b731af5d47d634e0f507b2c4600995ec87550a7e17b697cf4a9852e50104-V image-0-02-06-9087c1d3f47fcfa60a5d9f6a307f7e9caad4a22042fdcb2cc2c3ad25015fa712-V image-0-02-06-0582122e9982b8728c28c5d95769f7c7e84569ede24503a93e653d3e3df59ca2-V image-0-02-06-5177423ea41a95dde41f29174f1e09fd56dba0ec8012c7b2636e11aa9052cefe-V image-0-02-06-ad7c528c4b6a2bafbaeb45f7dc5c9fd74acff114d22b5e97d2af4204bd7b7f3a-V image-0-02-06-b25f1cdce9a8e5def0f7397d89e2ca6dbe1c8429923e5e11da587ccf5b78da4b-V image-0-02-06-e4df550e7d25b64b50fecb5cfef70e6918a10052da6ca37485631142a8840982-V image-0-02-06-f8a97d0d888a6aff7051eb667c5505b3b4c6d1497339a908169a0d002e49b1dd-V image-0-02-06-f8e1eb4741f01eb14e041cdde0bb13ae640ee225cd4b7c908fec8ed63f6e8982-V

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here