மஹிந்த நாமம் கசப்பது முஸ்லிம்களுக்கே ஆபத்து-இபாஸ் நபுஹான்

0
365

IMG_4084மஹிந்த நாமம் கசப்பது முஸ்லிம்களுக்கே ஆபத்தானதென பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறு பிள்ளைகளைக் கட்டுப்படுத்த பேய் வருகின்றதென ஏமாற்றுவதைப் போன்று தான் இன்றைய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை அடக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு பல ஆதாரங்கள் இருந்தாலும், அண்மையில் இவ்வரசு கொண்டு வந்த மாகாண சபைத்தேர்தல் திருத்தச்சட்டத்தின் போதான ஒரு விடயம் முஸ்லிம்களை எந்தளவு பாதித்துள்ளதென்பதை நாமனைவரும் அறிவோம்.

ஆனால், மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் என்பதற்காகவே இந்தத்திருத்தத்தைக் கொண்டு வந்தாதக அரச தரப்புத்தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த மாகாண சபைத்தேர்தல் திருத்தச்சட்டம் முஸ்லிம்களை அதிகம் பாதிக்குமென்பது அனைவருக்கும் தெரியும். அந்நிலையில் இதனை எதிர்க்க அமைச்சர் றிஷாத் உறுதியாக இருந்துள்ளார். இதன் போது அமைச்சர் றிஷாத் முன்னாள் ஜனாதிபதி  ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவே இயங்குகிறார் என்ற பேச்சை எழுப்பி அமைச்சர் றிஷாதை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளனர்.

இதன் மூலம் அமைச்சர் றிஷாத்தும் முஸ்லிம்களுக்கெதிரான ஒரு பாரிய துரோகத்தில் பங்கு கொண்டுள்ளார். இதற்கு பயன்பட்ட ஆயுதம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் நாமம். இன்று மஹிந்த நாமத்தைக்கூறினால் முஸ்லிம்களிடம் குறித்த அரசியல்வாதிகளை பூச்சியமாக்கி விடலாம்.

முஸ்லிம்களுக்கு ஆபத்தான ஒரு விடயத்தைச் செய்து கொள்ள முஸ்லிம்களின் மஹிந்த மீதான வெறுப்புக்கொள்கையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் முன்னாள் ஜனாதிபதி மீது முஸ்லிம்கள் வெறுப்பைக் கொண்டிருந்தால் அதனைச்சாதகமாக வைத்தே இவ்வாட்சியாளர்கள் இது போன்ற பல விடயங்களைச் சாதித்துக் கொள்வார்கள் என்பதை முஸ்லிம்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டுமென பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here