சோற்றுப்பீங்கானோடு மஹிந்த பின்னால் ஓடிய அமைச்சர்

0
228

indexஎம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்
சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் மஹிந்தவை ஒதுக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக்கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அவர்களுள் பலர் மஹிந்தவைக் கண்டால் நடுங்கவே செய்கின்றனர். கடந்த வாரம் கூட அவ்வாறானதொரு சம்பவம் நாடாளுமன்றில் இடம்பெற்றது.

நாடாளுமன்றிருக்குச் சென்ற மஹிந்த பககுணவை எடுப்பதற்காக நாடாளுமன்றின் உணவுச்சாலைக்குச் சென்றார். அங்கு ஓர் ஓரத்தில் அமர்ந்து கொண்டு அமைச்சர் பைஸர் முஸ்தபா உணவு உண்டு கொண்டிருப்பதைக்கண்டு அவர் அருகே சென்று ”என்ன பைசர் சாப்பிடுறீங்க போல” என்றார்.

இதை எதிர்பார்த்திராத அமைச்சர் சடாரென எழுந்து, அடக்கம் ஒடுக்கமாக நின்று ”ஆமாம் சேர்” என்றார்.

அமைச்சரின் முதுகிலே சின்னதாக ஒரு அடியைப்போட்டு விட்டு ”என்ன பைஸர்! மாகாண சபைத்தேர்தலையும் ஒத்திப்போடப் போகிறீர்கள் போல” என்று கூறி விட்டு அடுத்த மேசைக்குச் சென்று விட்டார்  மஹிந்த.

பைஸருக்கோ இந்தக்கேள்விக்கான பதிலை வழங்கி விட வேண்டும் போலிருந்தது. உடனே சோற்றுப் பீங்கானை தூக்கிக்கொண்டு மஹிந்த அமர்ந்திருந்த ஆசனத்துக்குப் பக்கத்தில் போய் அமர்ந்தார்.

‘நான் என்ன சேர் செய்வது? இது நான் எடுத்த முடிவில்லையே. என்ன நடந்திருக்குமென்று உங்களுக்குத் தெரியும் தானே.” என்றார் பைஸல். ”மேலிடத்து உத்தரவை ஏற்று சும்மா சிக்கலில் வீழ்த்துடாதீங்க பைஸர் ” என்று ஒரு வகையான தொனியில் கூறினார் மஹிந்த.

இந்த விடயத்தில் மஹிந்த தன் மீது குற்றம் சுமத்தி விடக்கூடாதென்பதில் பைஸர் குறியாக இருந்தது, பைஸரின் செயற்பாட்டில் தெரிந்தது. சாப்பாட்டில் கவனஞ்செலுத்தாது மஹிந்தவை சமாளிப்பதிலேயே கவனஞ்செலுத்தினார்.

மஹிந்த அங்குமிங்கும் எழுந்து செல்லும் போதெல்லாம் பைசரும் சோற்றுப் பீங்கானோடு மஹிந்தவின் பின்னால் ஓடித்திரிந்தமை கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது.

மஹிந்த அப்போது ஊட்டிய பயம் இப்போதும் நல்லா வேலை செய்கிறது போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here