நாடு முழுவதும் "மீண்டும் நாம் எழுந்திடுவோம்-தானியக்களஞ்சியங்களை நிரப்பிடுவோம்” ஜனாதிபதியின் விசேட திட்டம்

0
246

fff“மீண்டும் நாம் எழுந்திடுவோம்-தானியக்களஞ்சியங்களை நிரப்பிடுவோம்” ஜனாதிபதியின் விசேட திட்டம் அக்டோபா் 06- 12ம் திகதி வரை தேசிய உணவு உற்பத்தி வாரம் நாடு முழுவதிலும்  வீடமைப்பு அமைச்சினால்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

(அஷ்ரப்  ஏ சமத்)
இந்நாட்டின் உணவு உற்பத்தியினை அதிகூடிய விதத்தில் விருத்தி செய்வதற்காக ஜனாதிபதி அவா்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய உணவு உற்பத்தி வாரம்  2017அக்டோபர் மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் கல்வி, வீடமைப்பு, மாகாண, விவசாயம், காணி, உயா்கல்வி, உள்நாட்டு விவகாரம், மகாவலி, வன ஜீவராசி  போன்ற பத்துக்கும் மேற்பட்ட பல அமைச்சுக்களின் கீழ் வரும் சபைகள், நிறுவனங்கள் சம்பந்தப்பட்டு உணவு உற்பத்தி வாரத்தினை நாடு முழுவதிலும் அனுஸ்டித்து வருகின்றது.

இவ்வாரங்களில் சகல வீடுகள், அரச காணிகள், தனியாா் நிலங்களில் தமக்கென ஒரு தானிய, பழ வா்த்தகப்பயிா்களை அரசாங்கம் இலவசமாக சகல பொது மக்களுக்கும் வழங்கி, உணவு உற்பத்தியில் ஒரு விழிப்புணா்வை ஏற்படுத்துகிறது.

அத்துடன், வீடுகளில், தனியாா் காணிகளில் கூடுதலாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் தென்னை மரங்கள் கூடுதலாக நடுவதற்காகத் தேவையானோருக்கு  இலவசமாக விநியோகிக்கின்றது. அத்துடன், கிரமங்களிலுள்ள தானியங்கள், பழ  வகைகளைப் பல்வேறு சந்தைப்படுத்தல் உள்நாட்டு வெளிநாட்டவா்கள் எமது இலங்கையில் உற்பத்தி செய்யும் உணவுப்பயிா்களையும், அதனை உண்பதற்கும் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளிலிருந்து தருவிக்கும் நச்சு வாயுகள் கொண்ட செயற்கை உணவுகளை விட, உள்ளூர் உணவு வகைகள் ஊக்குவிக்கப்படும் இத்திட்டத்திற்காக நாட்டிலுள்ள சகல பாடசாலை மாணவா்களும் எதிா்வரும் 06- 12ஆம் திகதி வரை ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதற்காக கல்வியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த முன்னுரிமை தேசிய அபிவிருத்தி நடவடிக்கை ஒன்றாகக்கருதி  மாவட்டத்திலுள்ள செமட்ட செவன தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரையில் ஆரம்பிக்கப்பட்ட மாதிரிக்கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவ்வாறு  கிராமங்கள் காணப்படாத  மவாட்டங்களில் திறந்து வைப்பதற்கு தயார் நிலையிலுள்ள  கிராமத்தினுள்  வீடுகளின் முற்றத்தில் உணவுப்பயிா்களை நாட்டி, அதனைப்பராமரிக்கவும் அனைத்து மாதிரிக்கிராமங்களினுள் இந்த தேசிய விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதசா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன், கிராமங்கள் தோறும் உலக குடியிருப்பு தினத்திற்கு சமாந்திரமாக குடியிருப்பு வாரத்தினுள் இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாட்டின் அனைத்து மாவட்டக் காரியாலயங்களும் தமது  மாவாட்டங்களிலுள்ள மாதிரிக்கிராமங்களில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அதே வேளையில், உலக குடியிருப்பு தினம் அக்டோபா் 2ஆம் திகதியிலிருந்து ஒரு வார காலத்திற்கு நாடு முழுவதிலுமுள்ள 25 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக  அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன்  தேசிய வைபவம் கடந்த அக்டோபா் 2ஆம் திகதி  மாத்தறையிலுள்ள சனத் ஜயசூரிய மைதானத்தில் நிதி மற்றும் வெகுஜன தொடா்பு அமைச்சா் மங்கள சமரவீர மற்றும் வீடமைப்பு அமைச்சா்  சஜித் பிரேமதாசவினால் ஆரம்பித்து வைத்து, முழு நாள் நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது.

இவ்வாண்டினை ஜக்கிய நாடுகள் உலக குடியிருப்பு அமையம் ”பொருத்தமான ஒரு வீட்டின் உரிமைய யாவருக்கும்” என்ற தொனிப்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அத்துடன், கடந்த  02 ஆம் திகதி வரை  உலக குடியிருப்பு வாரத்தினை முன்னிட்டு  பாடசாலை மாணவா்களுக்கிடையே நடாத்திய கட்டுரைப்போட்டி, சித்திரப்போட்டி, வீதி நாடகம் போன்றவற்றில் வெற்றி பெற்றவா்களுக்கு விருதுகளும் பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது.

500க்கும் மேற்பட்ட மக்களுக்கு வீடமைப்புக்கடன் திட்டம், நிர்மாணத்துறையில் இளைஞா் யுவதிகளுக்கு நிர்மாணம் சம்பந்தமான உபகரணப்பொதிகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை, வெலிகமவில் மாதிரிக்கிராம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டன. அத்துடன், வீடமைப்புத்துறை சார்நதவா்களுக்கான கருத்தரங்குகள், விழிப்புணா்வுகள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டன.

காலஞ்சென்ற ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவா்களின் தனக்கேயுரிய ஒரு வீட்டில் வாழ்வதற்கான  உரிமையினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையினைப்  பெற்றுக்கொடுக்க  உன்னதமான உதாகம என்னக்கருவினை அர்த்தமூட்டும் வகையில், ஜக்கிய நாடுகள் சபையினால் 1986 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட  உலக குடியிருப்பு தினத்தின் 31வது ஆண்டு நிறைவுக்கொண்டாட்டமே இவ்வாண்டின் அக்டோபா் 2ஆம்  திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மாத்தறையில் கொண்டாடப்பட்டது.

உலகிலேயே வாழும்  மக்கள் அன்றாடம் பல்வேறுபட்ட  பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனா். இப்பிரச்சினைகள் சமூக, பொருளாதார, உட்கட்டமைப்பு போன்ற பலதரப்பட்ட காரணிகளுடன் தொடா்புபட்டதாகும்.

இவை தொடா்பான நிரந்தரத்தீர்வைக் காண்பதற்கும் வருடா வருடம் ஜக்கிய நாடுகள் அமையத்தினால் உலக குடியிருப்பு அமையம் அக்டோபா் முதல் திங்கட்கிழமையை உலக குடியிருப்பு தினமாகக் கொண்டாடுகின்றது.  மனித வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற வீடுகளில் வாழுகின்ற மக்களின் வீட்டுத்தேவையையும், அதனோடு தொடா்புடைய சுற்றாடல் பிரச்சினைகளையும் கருத்திற்கொண்டு அவற்றைத்தீா்த்து வைப்பதற்கானதொரு சந்தா்ப்பத்தினை வழங்குவதே இந்த உலக குடியிருப்பு தினத்தின் அடிப்பைடை நோக்கமாகும். 444 fff ffff ggg gggg

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here