முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலைத்தொகுதி அமைப்பாளராக அன்வர் நியமனம்

0
286

IMG_9581 (Medium) - Copyஎம்.ரீ.ஹைதர் அலி

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவரும், பிரதி சுகாதார அமைச்சரின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்புச்செயலாளருமான ஆர்.எம். அன்வர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரைக்கமைவாக தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீனினால் இந்நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனக் கடிதத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரிடம் நேற்று 2017.10.04ம் திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாக கொழும்பில் வைத்து கையளித்தார். IMG_9581 (Medium)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here