சந்திவெளி-திகிலிவெட்டை துறைக்கிடையிலான போக்குவரத்துப்பாதை சீர்செய்யப்பட்டுள்ளது-பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன்

0
291

DSC08496எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவில் சந்திவெளி – திகிலிவெட்டை துறைக்கிடையிலான பாதை நான்கு நாட்களாக இயங்காமலிருந்த நிலையில் கடந்த 03.10.2017ம் திகதி தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளதாக பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

கடந்த நான்கு நாட்களாக பாதை பழுதடைந்த நிலையிலிருந்தமையால் அவ்வழியால் அன்றாடம் பயணிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட நாளாந்த தொழிலுக்காக பயணம் செய்யும் மக்கள் அனைவரும் தமது அன்றாடத்தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பயணம் மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

இத்துறையினூடான பாதையினால் சந்திவெளியிலிருந்து குடும்பிமலை, திகிலிவெட்டை மற்றும் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பல கிராமங்களுக்கு மக்கள் இத்துறையினூடான பாதையினையே பயன்படுத்துவது வழக்கம்.

இவ்வாறு நான்கு நாட்கள் இப்பாதை பழுதடைந்த நிலையில் இயங்காமலிருந்தமையால்  நாளாந்தம் விறகு வெட்டி, சேனைத்தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தைக் கொண்டு நடத்தும் வறிய மக்கள் மிக கஷ்டமாக நிலைமையினை எதிர்நோக்கியதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இது சம்பந்மாக மக்கள் தெரிவிக்கையில் கட்டணம் செலுத்தியே பாதையினூடாக தமது பயணத்தை மேற்கொள்வதாகவும், அவ்வாறு நாங்கள் கட்டணம் செலுத்தும் போது, இதற்குப்பொறுப்பானவர்கள் அதனை உரிய நேரத்தில் சீரமைத்துத் தராமையினால் மிக முக்கியமான தேவைகளை நிறைவேற்றுவதற்காக பயணத்தை மேற்கொள்ளுவதற்கு மிகவும்  சிரமத்தை அனுபவிப்பதாகவும் இனி மேல் இச்சேவையினைக் கட்டணமின்றி வழங்குமாறும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பாக  வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம் சிஹாப்தீன் மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,

இந்த விடயம் தொடர்பாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய கடந்த 03.10.2017ம் திகதி மூன்று இலட்சத்து நாற்பதாயிரம் பெறுமதியான புதிய வோட் எஞ்சின் ஒன்று கொள்வனவு செய்து வழங்கப்பட்டு சேவையினை மீள ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பிரதேச சபையின் பொறுப்பிலுள்ள படகுத்துறையினை சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய நிருவாக சபைக்கு டென்டர் அடிப்படையில் கொடுத்துள்ளதுடன், அதன் வருமானமும் மேற்படி ஆலய நிருவாகத்திற்கே உரியதெனவும் சிறிய திருத்தங்கள் ஆலய நிருவாக சமைக்கும் பராமரிப்பு[ப் பணிகள் பிரதேச சபைக்கும் உரியதெனவும், அத்தோடு இச்சேவையினை பிரதேச சபையினூடாக நேரடியாக கட்டணமின்றி நடத்துவதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாகவும், பெரிய வாகனங்களை இப்பாதையில் ஏற்றுவதாலும் அடிக்கடி பழுதடைவதாகவும் தெரிவித்தார்.20171003_092550_resized_1 20171003_092601_resized 20171003_092612_resized_1 20171003_093210_resized 20171003_093220_resized_1 20171003_093225_resized_1 20171003_093552_resized_1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here