தீயினால் வீட்டை இழந்த மீனவருக்கு எஸ்.யோகேஸ்வரன் எம்பி உதவி

0
247

IMG-20171003-WA0006எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பேத்தாழை கருங்காலிச்சோலையில் தீயினால் எரிந்த வீட்டின் உரிமையாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் நேரில் சென்று சிறு தொகைப்பணத்தினை வழங்கியுள்ளார்.

பேத்தாழை கருங்காலிச்சோலையைச்சேர்ந்த வறிய மீன் பிடித்தொழிலாளி முத்துவேல் சந்திரன் என்பவரது வீடே தீயினால் கடந்த வியாழக்கிழமை முற்றுமுழுதாக எரிந்து சேதமாகியுள்ளது.

குறித்த நபரின் இடத்திற்குச்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தீ ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், சிறுதொகைப்பண உதவிகளையும் வழங்கி வைத்ததுடன், தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

உணவு உண்ட பின்னர் தாம் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்குச்சென்றதாகவும், தமது மனைவி தென்னம் ஓலை மட்டை இலைப்பதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றதாகவும், இதன் போது அடுப்பிலிருந்த தனல் அருகிலிருந்த வீட்டின் ஓலையில் தீயாக பரவி வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.IMG-20171003-WA0003 IMG-20171003-WA0005 IMG-20171003-WA0006

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here