ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம் மாகாண மட்டத்தில் சாதனை

0
274

20171005_124653எஸ்.எம்.எம்.முர்ஷித்
நேற்று வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவன் நயீம் முஹம்மட் ஸஜீல் 191 புள்ளிகளைப்பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலாவது இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகப்பிரிவில் ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பப் பாடசாலையாகும். இப்பாடசாலையிலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு இரண்டாவது முறை தோற்றிய மாணவரே  நயீம் முஹம்மட் ஸஜீல் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பாடசாலையில் இம்முறை தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் இருபத்திரெண்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், அதில் ஒரு மாணவன் 191 புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்திருப்பது எமது பாடசாலைக்கு கிடைத்த வெற்றியாகுமென்று பாடசாலையின் அதிபர் ஏ.சி.எம்.அஜ்மீர் தெரிவித்தார். 20171005_123430 20171005_124653

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here