பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம்

0
283

3(அகமட் எஸ். முகைடீன்)
பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தொடரின் அங்குரார்ப்பண வைபவம் கொழும்பு ஹில்டென் ஹோட்டலில் இன்று (5) புதன்கிழமை நடைபெற்றது.

பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் தலைவி லுயிஸ் லிவிங்ஸ்டென் மார்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பின் உதவித்தலைவர் புரூச் றிச்சட் றோபட்சன், இலங்கை மக்கள் வங்கியின் தலைவரும் பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான உதவித்தலைவருமான ஹெமசிறி பெர்னான்டோ உள்ளிட்ட பொதுநலவாய விளையாட்டுக் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டமானது தொடர்ச்சியாக இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.5 IMG_0439 IMG_0445 IMG_0446 IMG_04555 IMG_04393

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here