அவுஸ்திரேலியாவில் கலாநிதி பட்டம் பெற்ற அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் காத்தான்குடி சம்மேளனத்தால் கௌரவிப்பு

0
187

DSC08868எஸ்.எம்.எம்.முர்ஷித்.
காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான  ‘த ஹெவன் குறூப்’ நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் பணிப்பாளருமான கலாநிதி அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் நளீமி அவுஸ்திரேலியாவின் கென்பரா பல்கலைக்கழகத்தில் கணனி முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம் பெற்றமைக்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது கலாநிதி அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் நளீமி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் அதிதிகளினால் விருது வழங்கி பாராட்டிக்கெளரவிக்கப்பட்டார்.

கலாநிதி கௌரவிப்பு நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உபதலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உலமாக்கள், சம்மேளன உறுப்பினர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.DSC08860 DSC08863 DSC08865 DSC08868 DSC08870 DSC08876 DSC08877 DSC08878 DSC08883 DSC08884 DSC08886

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here