கூலித்தொழில் செய்து மகனை சாதனை பெறச்செய்த தந்தை!

0
305

20171005_165258_resized_1எஸ்.எம்.எம்.முர்ஷித்
2017 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்  மட்டு-கல்குடா கல்வி வலயத்தில் மீராவோடை தமிழ் சக்தி வித்தியாலய மாணவன் கல்குடா வலயத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இம்மாணவன் கல்குடா வலயத்தில் 182 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தைப் பெற்று குறித்த பாடசாலைக்கும் கோறளைப்பற்று கோட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வாழைச்சேனை-மீராவோடை தமிழ் கிராமத்தைச்சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் செல்வன் பிரதீபன் நிதுர்ஜன் எனும் மாணவனே இவ்வாறு சித்தியடைந்தார்.

இம்மாணவனுக்கு கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் தி.ரவி மற்றும் கோறளைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் நா.குணலிங்கம் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவனின் தந்தை பிரதீபன் தெரிவிக்கையில், “நான் மிகவும் கஷ்டப்பட்டு கூலிக்கு பால் இழுத்து எனது மகனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்காகப் படிப்பித்தேன். மேலும், எனது மகனைக்கற்பித்த ஆசிரியர்களுக்கும் சக்தி வித்தியாலய அதிபர் சா.சுதாகரன் அவர்களுக்கும் அத்தோடு இறைவனுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்து கூறினார்.

மேற்படி பாடசாலை யுத்த காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், கஷ்டப்பிரதேச பாடசாலையென்பதும் குறிப்பிடத்தக்கது.20171005_165258_resized_1 20171005_165346_resized_2 20171005_165400_resized_2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here