கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கற்பித்த ஆசான்களைக்கௌரவிக்கும் கல்முனை ஸாஹிராவின் ‘88/91 பழைய மாணவர்கள்

0
46

KM ZCK 2(எம்.எம்.ஏ.ஸமட்)
கல்முனை ஸாஹிரா தேசிய மட்டத்திலும், பிராந்தியத்தியத்திலும் பல்துறை நிபுணர்களையும், ஆளுமைகளையும் உருவாக்கிய பாடசாலையாகும். இப்பாடசாலையின் கீர்த்திக்கு வித்திட்ட ஆசான்கள் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.

அந்த வகையில், ஒக்டோபர் 5ஆம் திகதி உலகளவில் அனுஷ்டிக்கப்படும் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கால் நூற்றாண்டு கடந்தும் கற்பித்த ஆசான்களை மறக்காது நன்றியுணர்வோடு, ஏனைய பழைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் வண்ணம் ஆளுமைக்களுக்கு அத்திரவாரமிட்ட ஆசான்களை மறக்காது வாழ்த்திக் கௌரவிக்கும் விழாவொன்றை கல்முனை ஸாஹிராவின் ‘88/91இன் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

காலத்தால் அழியாத கல்விக்கு ஒளி கொடுத்து, முகவரி தந்த முத்துக்களான ஆசான்களை வாழ்த்திக்கௌரவிக்கும் இவ்விழா, எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை மாலை  6 மணிக்கு “ஸாஹிராவின் பச்சை வெளித்திறந்த அரங்கில்” இவ்விழா ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் எம்.ஐ. அஸ்மி தலைமையில் நடைபெறவுள்ளது.

இப்பாடசாலையில் 1998 மற்றும் 1991ம் ஆண்டு காலங்களில் அதிபர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிபர்களான எம்.சி.ஆதம்பாவா, எம்.எச். ஹுசைன் மற்றும் தற்போதைய அதிபர் எம்.எஸ் முஹம்மட் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறும் விழாவின் போது, ‘88/91 ஆண்டுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள், ஆக்கங்களை உள்ளடக்கிய “முகவரி தந்த முத்துக்கள்” என்ற விழா சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

அத்துடன், இவ்விழாவின் இறுதியில் ‘88/91 ம் ஆண்டு காலப்பகுதியில் கற்பித்த ஆசான்கள் மற்றும் அதிபர்கள்  வாழ்த்திக் கௌரவிக்கப்படவுள்ளதுடன், நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், இவ்விழாவையொட்டியதான சிநோகபூர்வ மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியொன்றை எதிர்வரும் சனிக்கிழமை காலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here