கலக்கத்தில் இரண்டு அமைச்சர்கள்

0
320
[எம்.ஐமுபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்] 
மத்திய வங்கி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க சிக்கியதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளார்களாம்.
அர்ஜுன ஆலோசியஸ் ரவிக்கு மாத்திரமன்றி இந்த இரண்டு பேருக்கும் வீடுகள் வாங்கிக் கொடுத்துள்ளார் என்ற செய்தி உலாவுவதே இந்த அச்சத்துக்குக் காரணமாம்.
இந்த மோசடியுடன் யாரெல்லாம் தொடர்புபட்டுள்ளனர் என்ற விவரம் மஹிந்தவின் ஆட்களிடம் உள்ளதாம்.
அதில் முதலிடத்திலிருப்பவர் ரவி தான். ரவிக்கெதிரான நடவடிக்கையில் அவர்கள்  வெற்றி பெற்றுள்ளதால் அடுத்தவர்களுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கு மஹிந்த அணியினர் திட்டமிட்டுள்ளனராம்.
அந்த வகையில் முதலில் சிக்கப் போகின்றவர்கள் மேற்படி அந்த இரண்டு அமைச்சர்கள்தானாம். அந்த அமைச்சர்கள் வேறு யாருமல்ல நானும் அஜித் பீ பெரேராவும் தான் என்று பிரதியமைச்சர் சுஜீவ சேரசிங்க அவரது சகாக்களிடம் கூறியுள்ளாராம்.
இப்போது இவர்கள் இருவரும் சற்றுக் கலகத்தில் தான் உள்ளனராம்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான கோப் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் இவர்கள் இருவரும் பெர்பாச்சுவல் நிறுவனத்துக்கு ஆதரவாகவே மறைமுகமாக குரல் கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.
அப்போதே லைட்டா சந்தேகம் வந்தது இவர்கள் அவரிடம் சம்திங்க் வாங்கி இருப்பங்களோ என்று. அப்ப சரி தான் போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here