சட்ட திருத்தங்களில் நல்லாட்சி அரசின் திருவிளையாடல் ..

0
181

unnamed (1)இவ்வரசு மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தை மொழிக்கு மொழி வேறுபாடுடைய கருத்துக்களை தெரிவிக்கும் வண்ணம் அமைத்து சட்டத்தில் விளையாடுவதானது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என ஹம்பாஹ்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக குறிப்பிட்டார்.

நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்…

தற்போதைய அரசாங்கமானது மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தை மிக அவசரமாக கொண்டுவந்திருந்தது.ஒரு சட்டம் என்பது மிக நீண்ட கலந்துரையாடலின் பின் கொண்டுவரப்படல் வேண்டும்.அது ஒன்றுக்கு இரண்டு முறை கலந்துரையாடப்பட்டே இறுதியில் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.அவ்வாறு எதுவும் இச் சட்ட மூலம் கொண்டுவரப்படும் போது பார்க்கப்படவில்லை.

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் ஒவ்வொரு மொழிப் பிரதியிலும் வெவ்வேறு கருத்துடைய வார்த்தைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.சில இடங்களில் சில வார்த்தைகளே இல்லை. இதுவே இச்சட்டத்தின் தரத்தை அறிய போதுமானதாகும்.சிங்கள மொழியில் கூறப்பட்டுள்ளதே சரியான வடிவம் என பாரம்பரியமாக கடைப்பிடித்து வரப்படும் சட்டத்துக்கு இத் திருத்தத்திலேயே வேலை வந்துள்ளது.

பொதுவாக வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவர்கள் சிங்கள மொழி அறிவு குறைந்தவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எவ்வாறு இச் சட்டங்களை விளங்கி கொள்வது.அவர்கள் இச் சட்டத்தை தெளிவாக அறிய சிங்களம் படிக்க வேண்டும்.இது சாத்தியமா? ஏன் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் கூட சிங்கள மொழி மூலத்தை விளங்க முடியாதவர்கள் உள்ளனர்.

மொழி மூல வரைபுகளில் உள்ள மாற்றங்கள் மக்களை ஏமாற்றுவதற்கான செயலாகவுமிருக்கலாமென நம்பப்படுகிறது. சட்டங்களில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான விளையாட்டுக்கள் பாரிய ஆபத்துக்களை தோற்றுவிக்கும் என்பதை இவ்வாட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.(F)

joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here