புரிந்துணர்வில்லாவிட்டால் வடக்கு கிழக்கு இணைப்புச் சாத்தியமில்லை-அலிஸாஹீர் மௌலானா எம்பி

0
276

01 (6)எஸ்.எம்.எம்.முர்ஷித்
வடக்கு கிழக்கில் சிறுபான்மை இன மக்களிடத்தில் காணப்படும் பிரச்சனைகளை அடிமட்ட ரீதியாக புரிந்துணர்வுடன் தீர்க்கக்கூடிய கடமைப்பாடு இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலானா தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் தனது 2017ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் உதவிகள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் சிறுபான்மை இன மக்களாக வாழும் எமக்குள்ளேயே ஒரு உடன்பாடில்லாத நிலைமை காணப்படுகின்றது. எமது மக்களிடத்தில் காணிப்பிரச்சனை, பல சங்கடமான பிரச்சனைகள் காணப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சனைகனை ஒரு புரிந்துணர்வுடன் தீர்ப்பதற்கு இல்லாமல் எங்களுக்குள்ளேயே பிரச்சனைகள் வருகின்ற நேரத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கப்போவதென்பது எவ்வாறு சாத்தியப்படப் போகின்றது. இவ்வாறான விடங்களில் பல சந்தேகங்கள் இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஏனைய தலைவர்களும் ஒன்றாக தேனீர் அருந்திப்பேசினாலும், எங்கள் மத்தியில் அடிமட்ட ரீதியாலான பல பிரச்சனைகள் புரையோடிப் போய்க் காணப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சனைகளை அடிமட்ட ரீதியாகப் புரிந்துணர்வுடன் தீர்க்கக்கூடிய கடமைப்பாடு இருக்கின்றது. எனவே, ஒவ்வொரு பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டுமென்ற அடிப்படையில் முயற்சி செய்து வருகின்றோம்.

இந்நாட்டில் சமாதானம் ஏற்பட்டதோ அதற்கு பிறகு அபிவிருத்திகள் என்ற அடிப்படையில் மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிரச்சனைகள் என்ற சாட்டுப்போக்கில் பின் தள்ளப்பட்டது. சமமான அளவில் அனைவருக்கும் அபிவிருத்திகள் கிடைக்கப்படாத காலங்கள் காணப்பட்டது. ஒதுக்கப்பட்ட பகுதிகளும் காணப்பட்டது.

அரசாங்கம் ஒரு பக்கம் இருக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் இன்னுமொரு பக்கம் செய்யக்கூடிய நிலை காணப்பட்டது. தற்போது அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் யாரும் ஒதுக்கப்படாத முறையில் எல்லோரும் உள்வாங்கப்பட்டு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவது தான் நிலையான அபிவிருத்தியாக அமைய வேண்டுமென்பதில் கவனஞ்செலுத்துகின்றோம்.

அரசாங்கத்திலுள்ளவர்கள் தங்களின் தேவைகளுக்கேற்றபடி சட்டங்களை மாற்றிக்கொண்டு அடுத்த தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுத்து தொடர்ந்து ஆட்சியை கையில் வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் சிலர் சட்ட மாற்றங்களைச் செய்கின்றார்கள்.

பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டு வந்து அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றார்கள். தற்போது இலங்கையில் எந்தவொரு அரசியல் மாற்றங்கள் வந்தாலும், பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மாத்திரமல்ல. மக்களது சர்வஜன வாக்கைப்பெற்றுத்தான் சட்டமாக்கலாம் என்ற நியதி.

பாராளுமன்றத்திற்கு இருபதாவது சட்டம் முதலில் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், அதற்கு முதல் மாகாண சபையில் என்னவென்று தெரியாமல் ஆதரவு வழங்கினார்கள்.

தங்களுக்குரிய அரசியல் அறிவுகளோ அல்லது என்ன அடிப்படையில் அரசாங்கம் தங்களது தேவைகளுக்காக இந்த விடயங்களைக் கொண்டு வருகின்றார்கள் என்பதைக்கூட சரியான முறையில் அறியாமல் வைத்துக் கொண்டு இன்னும் இரண்டு வருடங்கள் நாங்கள் இருக்கப்போகின்றோம் என்று மற்றவர்களை ஒதுக்கிக்கொண்டிருந்த ஒரு கால கட்டமும் இருந்தது என்றார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஏறாவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம்.தஸ்லீம், செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது, பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலானாவின் 2017ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, விளையாட்டுக்கழகங்கள், இளைஞர்கள் கழகங்கள், அறபுக்கல்லூரி, பள்ளிவாயல்கள், பாலர் பாடசாலைகள் என்பவற்றுக்கு வழங்கி வைக்கப்பட்டது.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11) 01 (12)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here