சாராயத்தில் கலப்படம்: கவலையில் MP

0
263

(எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்)

unnamedவடக்கு-கிழக்கு மக்களின் மூன்று வேளை உணவாகவும் சாராயத்தைக் கொடுப்பதற்கு இந்த அரசு திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பதிலாக அவர்களிடையே குடிப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.அதற்கான ஆதாரம்தான் கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சாராயத் தொழில்சாலை.
இந்தத் தொழில்சாலையை நிறுத்துவது தொடர்பில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எந்தவோர் அரசியல்வாதியும் நடவடிக்கை எடுக்கவில்லை;அதற்காக கவலைப்படவில்லை.ஆனால், அவர்கள் அருந்தும் சாராயத்தில் கலப்படம் செய்யப்படுவது தொடர்பில்தான் அவர்கள் கவலைகொள்கின்றனர்.

அண்மையில் இடம்பெற்ற சாராய விருந்துபசாரம் ஒன்றில் ஒரே பெயருடைய இரண்டு சாராய வகைகள் விநியோகிக்கப்பட்டனவாம்.ஒன்று நல்ல நிறமாகவும் நல்ல சுவையானதாகவும் இருந்ததாம்.மற்றையது மங்கிய நிறத்திலும் சுவை குறைந்தும் காணப்பட்டதாம்.
இந்த இரண்டாம் வகை சாராயம் எதனோல் கொண்டு தயாரிக்கப்பட்டதாம்.அதாவது கலப்படம் செய்யப்பட்ட-தரம் குறைந்த சாராயமாம்.இந்த மாபெரும் கண்டுபிடிப்பை மேற்கொண்டவர் ஓர் அரசியல்வாதியாம்.
அந்த அரசியல்வாதி உடன் சேர்ந்து சாராயம் அருந்திய இன்னோர் அரசியல்வாதியிடம் இந்தக் கண்டு பிடிப்பை வெளியிட்டதும் அந்த அரசியல்வாதி மிகவும் கவலைப்பட்டாராம்.இவர்கள் எதற்காக கவலைப்படுகின்றார்கள் என்று பார்த்தீர்களா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here