தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கெதிரான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்-நாமல் ராஜபக்ஷ

0
175

image_123986672நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கெதிரான போராட்டத்தினைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.

மத்தள விமான நிலையம் உட்பட நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடாதென்பதை வலியுறுத்தி ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்யப்பட்டது.

இதன் போது, 28 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டிய அவர், உண்மையை மறைக்கும் அரசாங்கத் தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கப் போவதில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here