நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மூத்த சமூகப் பங்களிப்பாளர்களை கெளரவிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு

0
292

DSC00093-காத்தான்குடி டீன்பைரூஸ்-
சமூகத்திற்காக பல்துறைகளிலும் பங்காற்றிய மூத்த பங்களிப்பாளர்கள் 13 பேரைக் கெளரவிக்கும் வரலாற்றுச்சிறப்புமிக்க நிகழ்வு (08.10.2017 ஞாயிறு) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் கட்சியின்  தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர்ரஹ்மான் தலைமையில்  நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னால் பீடாதிபதி  பேராசிரியர்  ஹுசைன் இஸ்மாயீல் அவர்கள் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சின்  ஓய்வு பெற்ற செயலாளர்  எம்.ஜ.எம்.றபீக், அட்லுகம அல்-கஸ்ஸாலி மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்ஹ் எம்.ஜே.எம்.மன்சூர் (நழீமி) ஆகியோரும், விசேட அதிதிகளாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஜ.அப்துல்கையும் (ஷர்கி) நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பொதுச்செயலாளர் நஜா முகம்மத், நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்ஹ் பிர்தௌஸ் (நழீமி), உதவிச்செயலாளர் சிராஜ் மசூர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கெளரவிக்கப்பட்ட மூத்த சமூகப் பங்களிப்பாளர்கள்.

·         அல்ஹாஜ். எம்.ஜ.அஹமட் முகைதீன். ஜேபி

·         அல்ஹாஜ் எம்.ஜ.சின்ன லெவ்வை. (ஓய்வு பெற்ற அதிபர்)

·         அல்ஹாஜ் எம்.ஏ.செய்யது முகம்மது. (ஜேபி. ஓய்வு பெற்ற அதிபர்)

·         அல்ஹாஜ் எம்.ஜ.ஏ.முஸ்தபா. (ஜேபி, ஓய்வு பெற்ற அதிபர்)

·         அல்ஹாஜ் கே.எம்.எம்.ஷரீப். (ஓய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரி)

·         அல்ஹாஜ் எம்.எல்.எம்.காசீம். ஜேபி

·         அல்ஹாஜ் எஸ்.எஸ்.எம்.அன்சார். பீ.ஏ. (ஓய்வு பெற்ற அதிபர்)

·         அல்ஹாஜ் எம்.வை.ஏ.செய்யது அஹமது. (ஓய்வு பெற்ற அதிபர்)

·         அல்ஹாஜ் எம்.எம்.முஸ்தபா. (ஓய்வு பெற்ற அதிபர்)

·         அல்ஹாஜ் எம்.பீ.எம்.மீராசாஹிபு. ஜேபி (ஓய்வு பெற்ற காழி நீதிபதி)

·         அல்ஹாஜ் எம்.எம்.ஏ.ஜூனைது. (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

·         அல்ஹாஜ் ஏ.எல்.ஏ.கபுர்.

·         அல்ஹாஜ் ஏ.எம்.எம்.இப்றாகிம். (ஓய்வு பெற்ற ஆசிரியர்)DSC00049 DSC00072 DSC00089 DSC00093DSC00032DSC00035DSC00041DSC00052

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here